சந்தியாவைக் கொன்றது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருக்கலாம்.. சகோதரி புகார்
Recommended Video

கன்னியாகுமரி: சந்தியாவின் உடல் உறுப்புகளை மர்ம கும்பல் திருடியிருக்கலாம் என்றும் இதில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். போலீஸார் திசை திருப்பும் செயலில் ஈடுபடக் கூடாது என்றும் அவரது சகோதரி சஜிதா கூறியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 40 வயது சந்தியாவின் தலை இன்னும் சிக்கிய பாடில்லை. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஞாலம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் பிரசன்னா என்பவரது மகள்தான் சந்தியா.

இவரைக் கொடூரமாக கொன்றதாக அவரது கணவர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதை விட முக்கியமாக தலை இன்னும் கிடைக்கவில்லை.
இந்த கொலையில் பாலகிருஷ்ணன் மட்டும் இதில் சம்பந்தப்படவில்லை. இது போன்ற கொடூர கொலையை ஒருவர் செய்திருக்க முடியாது. இதில் சதி இருப்பதாக அவரது உறவினர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

சந்தியாவின் கை, கால்கள் மட்டுமே கிடைத்துள்ளது. உடலின் முக்கிய பாகங்களான தலை மற்றும் உடல் பாகங்கள் கிடைக்காததால் கொலையில் சந்தேகம் எழுந்துள்ளது. கண், கிட்னி, இதயம் உள்ளிட்ட உடலுறுப்புக்காக சந்தியா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பலர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், போலிஸ் இந்த வழக்கை திசை திருப்ப முயல்கின்றனர் எனவும் சந்தியாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவரது சகோதரி சஜிதா கூறுகையில், போலீஸ் தரப்பிலேயே இந்த சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர். எனவே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications