தேர்தல் நெருங்க நெருங்க பல வேலைகள் நடக்கும்.. இதையெல்லாம் தெலுங்கு சினிமாலயே பார்த்துட்டோம்: சீமான்
கன்னியாகுமரி: தேர்தல் நெருங்க நெருங்க மத்திய அரசு இதுபோன்று பல வேலைகளை செய்யும், என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டில் சோதனை வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது எழுந்த ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று ரெய்டு மேற்கொண்டு, செந்தில் பாலாஜியை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சீமான், "தம்பி செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி எனச் சொல்கிறார்கள். அவர் குணமாகி வரவேண்டும் என நான் வாழ்த்துகிறேன். இவ்வளவுதான் சொல்ல முடியும். தமிழ்நாட்டில் சுவர் ஏறி குதித்து கைது செய்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. அதிகாரத்தில் யார் வந்தாலும் அவர்களின் வசதிபடிதான் நடந்து கொள்வார்கள்.

அ.தி.மு.க ஆட்சி இருக்கும்போது கருணாநிதியை எப்படி கைது செய்தது? ப.சிதம்பரத்தை வீடு ஏறி குதித்து கைது செய்தது எல்லாம் இருக்கிறது. கைது என்றவுடன் நெஞ்சுவலி வருவது எல்லாம் நாம் நிறைய தெலுங்கு படங்களில் பார்த்திருக்கிறோம். சாதாரணமா கைது பண்ணினால் நெஞ்சுவலி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலிதான் வரவேண்டும்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய வேலைகளை மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்வார்கள். இது போன்று போய் நிறுத்துவார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான், எதிர்பார்த்ததுதான். இது ஜனநாயக நாடு, மக்களாட்சி கோட்பாட்டை கொண்ட ஒரு நாடு, அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்று நாம் நினைத்தோம். அப்படித்தான் கட்டமைத்தோம்.
தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் என நினைத்தோம். அதிகாரம் தலையிடாது, சுதந்திரமாக இயங்கும் என நினைத்தோம். இப்போது அதெல்லாம் கிடையாது. இவை அனைத்தும் ஆட்சியில் இருப்பவர்களின் ஐந்து விரல்கள். அது நீட்டினால் நீட்டும், மடக்கினால் மடங்கும்.
என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டில் சோதனை வரும். ஏன் கைது பண்ணினார்கள், எதற்காக கைது பண்ணினார்கள் என வீட்டில்கூட சொல்லவேண்டியது இல்லை. இருட்டறையில் போட்டு சாகடிப்பதால்தான், சர்வாதிகாரம் எனச் சொல்லாமல் கொடுங்கோன்மை ஆட்சி என இதைச் சொல்லுவேன்.
பழிவாங்கும் நடவடிக்கை என தி.மு.க சொல்கிறது என்றால், இந்த காரணத்துக்காக பழிவாங்குகிறது என சொல்லவேண்டும். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த ஊழலை செய்தார்கள் என்றால் இவ்வளவு காலம் அமலாக்கத்துறை என்ன செய்தது? தகவல் தெரிந்ததும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதிமுக ஆட்சி முடிந்துபோய் எவ்வளவு காலம் ஆகிவிட்டது. அதிலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இவர் அமைச்சராக இல்லை. இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால் தேர்தல் ஸ்டண்ட் எனச்சொல்லாமல் வேறு என்னவென்று நினைப்பது? மிரட்டி பணிய வைப்பார்கள். அவர்கள் கூட்டணிக்கு போவார்கள், போகவில்லை அதுவேறு. ஆனால் அவர்கள் அச்சுறுத்துவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications