ராகுலுடன் ஸ்டாலின்.. குமரி காந்தி மண்டபத்தில் மரியாதை! அருகில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள்
கன்னியாகுமரி: இன்று கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் காந்தி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைந்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய தொடர் போராட்டம் அக்கட்சியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க நாடு முழுவதும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெறுக்கவும், ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இன்று ஒற்றுமை யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி.

அரசியல் சார்பற்ற பயணம்
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி நினைவிடம்
இன்று தொடங்கும் இந்த யாத்திரைக்காக தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் தலைவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரியில் ராகுல்
இதனை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். இந்த யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கன்னியாகுமரிக்கு சென்றார். தூத்துக்குடியில் இருந்து காரில் புறப்பட்ட அவரை வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

காந்தி மண்டபத்தில் மரியாதை
இதனை அடுத்து ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காந்தி மண்டபத்தில் ஒன்றாக மரியாதை செலுத்தினார்கள். அவர்களும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
-
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications