கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அடுத்தடுத்து 3 வாரங்களில் 3 உள்ளூர் விடுமுறைகள்.. மாணவர்கள் ஹேப்பி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 26ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பத்தாவது நாள் திருவிழாவையொட்டி மார்ச் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெறும். இதன்படி கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முஞ்சிறை அருகேவுள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம் நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் நிறைவடையும். 110 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் ஒவ்வொரு ஆண்டுமே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டர் வழியை பின்பற்றும் மக்கள், அவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக கருதி வழிபட்டு வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் பெரும்பாலான மக்கள் அவரை வழிபட்டு வருகின்றனர்.
வைகுண்டரின் பிறந்த தினத்தன்று, அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கமாகும் அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளும் வகையில் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் சபரிமலை என் போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கும். மொத்தம் பத்து நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். மூன்றாம் நாள் முதல் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, தினசரி மாலை சந்தனகுடம் பவனி, தினசரி காலை, மதியம், மாலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். விழாவின் பத்தாம் நாள் அன்று நள்ளிரவில் ஒடுக்கு பூஜை நடைபெறும். அன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைவிடப்படுவது வழக்கம். அந்த வகையில் மார்ச் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications