தமிழகத்தை மோடி புறக்கணிக்கிறார்... மோடியை தமிழகம் புறக்கணிக்கிறது... வசந்த குமார் சுளீர் சுளீர்
கன்னியாகுமரி: அதிமுக மற்றும் பா.ஜ.க. விற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆரூடம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு இன்று வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கிறார் என அனைத்து தரப்பு மக்களும், அரசியல் பிரமுகர்களும் கூறி வருவதை பிரதமர் நிரூபித்து வருகிறார் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை கொடுக்க மாட்டோம் என பாஜகவுக்கு தெரியும், அதனால் தான் உறுப்பினர்கள் இல்லாத தமிழகத்திற்கு நாம் எதற்கு செல்ல வேண்டும் என பிரதமர் நினைப்பதாக கிண்டலாக கூறினார்.
அதிமுக அமைச்சர்கள் மீது புகார்கள் உள்ளது. அதன் ஆதாரங்கள் மத்திய அரசிடம் சிக்கி உள்ளது. அதன் காரணமாக, அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறிய வசந்தகுமார் எம்.எல்.ஏ., ஜி.எஸ்.டி. பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் விவசாயிகள் வாழ்வு இழந்து உள்ளார்கள்.
இதனால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சி என்பது முடியாத காரியம் என்றும், தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட அதிமுகவிற்கோ, பா.ஜ.க. விற்கோ கிடைக்காது என்று தெரிவித்தார். மேலும், அதிமுக மற்றும் பா.ஜ.க. கட்சிகளின் வரலாறு வரும் நாடாளுமன்ற தேர்தலோடு முடிவடையும் என்றார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு












Click it and Unblock the Notifications