நாகர்கோவில் ஸ்பாவில் இளம் பெண்கள்.. 2000 கொடுத்து இளைஞர்கள் ஜாலி.. கன்னியாகுமரியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் நேற்று முன்தினம் மாற்று உடையில் ஒழுகினசேரி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் அருள் மோகன் என்பவர் வந்துள்ளார். அவரிடம் 'ஸ்பா'வில் பெண்களை வைத்து மசாஜ் செய்வதாகவும், அதற்கு ரூ.2 ஆயிரம் மட்டும் தந்தால் போதும் என்றும் கூறி அழைத்துள்ளார். இறுதியில் நடந்த ட்விஸ்ட் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற மாவட்டம் ஆகும். இங்கு கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை அணை என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றிப்பார்க்க பலர் வருகிறார்கள். இவர்களுக்காக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் ஏராளமான விடுதிகள் உள்ளன. அப்படி சுற்றுலா வரும் இளைஞர்களை குறிவைத்து சிலர் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்து கைதாகும் சம்பவங்கள் நடக்கின்றன. அப்படித்தான் நாகர்கோவில் வடசேரியில் நடந்துள்ளது.

the men who had fun with women from Kanyakumari at a spa in Nagercoil paying them 2000 rupees

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் கடந்த 11ம் தேதி சீருடையில் இல்லாமல், மாற்று உடையில் ஒழுகினசேரி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் பணியாற்றும் 22 வயதாகும் ஊழியர் அருள் மோகன் என்பவர் அங்கு வந்தார். பார்ப்பதற்கு சாதாரண நபர் போல நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கத்திடம் லாட்ஜில் உள்ள 'ஸ்பா'வில் பெண்களை வைத்து மசாஜ் செய்வதாகவும், அதற்கு ரூ.2 ஆயிரம் மட்டும் தந்தால் போதும் என்றும் கூறி அழைத்தாராம்.

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் அங்கு சென்றபோது அங்கு விபச்சாரம் நடப்பதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலம்மாள் தலைமையிலான போலீசார் நாகர்கோவலில் குறிப்பிடட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஸ்பா என்ற பெயரில் இளம்பெண்களை, வாலிபர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து பணம் வசூலித்ததை கண்டுபிடித்தனது. இதையடுத்து அங்கிருந்த 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். 2 பேரும் ஸ்பா டெக்னீசியன் என்ற பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் முட்டைகாடு மேடவிளை பகுதியை சேர்ந்த எபின் பிரிட்டோ (33), வலியவிளை பகுதியை சேர்ந்த தஹில் (20) ஆகியோர் மீதும், லாட்ஜ் மேலாளர் விஜிஜன் மிதுன்பாபு (31), லாட்ஜ் ஊழியர் அருள் மோகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.. பல லாட்ஜூகளில் போலீசார் கடந்த சில நாட்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+