அடேய் அரிகொம்பன்! என்னா பவ்யம்டா! பச்சபுள்ளமாதிரி தூங்குறியே.. நீதானா அது.. நம்பவே முடியலையே!
கன்னியாகுமரி: கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருந்த அரிகொம்பன் யானை களக்காடு வனப் பகுதியில் ஏதுமறியாத குழந்தை போல படுத்துறங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அரி கொம்பன் எனும் அரிசி கொம்பனாகிய நான்... இப்படித்தான் கேரளாவில் பொதுமக்களை தெறிக்க தெறிக்க ஓடவிட்டான் அரிகொம்பன் யானை. அரிகொம்பன் சாருக்கு அப்படி என்னதான் கோபமோ மனிதர்களைக் கண்டால்.. பார்த்தாலே தூக்கி போட்டு மிதிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் அய்யா.. அரிகொம்பன் அடித்த அடியில் இதுவரை 10 பேர் மரணம் அடைந்து போயிருக்கின்றனர். அதாவது அரிகொம்பன் தூக்கி மிதித்தது 10 பேரை மட்டுமல்ல.. 10 குடும்பங்களின் எதிர்காலத்தையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் துரை.

இதனால் கேரளா வனத்துறையினர் அரிகொம்பன் யானையை தேடி பிடித்து கண்டுபிடித்து தேக்கடி வனப்பகுதிதியில் இறக்கிவிட்டனார். ஆனால் அடங்காத அரிகொம்பன், அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டுக்குள் களமிறங்கிவிட்டார். அப்புறம் என்ன அல்லோகலப்பட்டுவிட்டது தமிழ்நாடு எல்லை!
கம்பம் நகருக்குள் சில நாட்களாக அண்ணன் அரிகொம்பனார் வீதி உலா நடத்தினார். அய்யா ஊர்வலம் போகும் போது மக்கள் எம்மாத்திரம்.. அதனால் அரசாங்கமே 144 தடை உத்தரவு போட்டு வீட்டுக்குள் மக்களை முடக்கி பாதுகாக்க வேண்டிய நிலைமை எல்லாம் ஏற்பட்டது. ஒரு வார காலம் தேனி, கம்பம் சுற்றுவட்டார மக்களை திராட்டில் ஓடவிட்டவர் அரிகொம்பன். ஒருகட்டத்தில் மயக்க ஊசியில் சிக்கி வனத்துறையின் பிடிக்கு வந்துவிட்டது அரிகொம்பன்.

இங்கிருந்துதான் கிளைமாக்ஸ்.. அதுவரை வில்லனாக வலம் வந்த அரிகொம்பன் அண்ணன். பின்னர் பரமசாதுவாகிப் போனார். அரிகொம்பன் யானையை களக்காடு வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர் வனத்துறையினர். ஆனால் அரிகொம்பனை எங்கள் பகுதிக்குள் விடக் கூடாது என தமிழ்நாட்டு மக்கள் போராடினர். அதேநேரத்தில் கேரளாவின் மூணாறு சின்னக்கானல் வனப்பகுதி மக்களோ, அரிகொம்பனின் பூர்வீகம் இது.. இங்கே கொண்டு வந்துவிடுங்க என மறியல் போராட்டமே நடத்தினர்.
இப்படியான திடீர் ஹீரோவான அரிகொம்பன், இப்போது செய்யும் சேட்டைகள்தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 10 பேரை போட்டு மிதித்த அரிகொம்பன் தல இபோது அடங்கி ஒடுங்கி அமைதியானவராக் வலம் வருகிறார். புற்களை பிடுங்கி அப்படியே சாப்பிடாமல் ஓடை நீரில் கழுவிவிட்டு -அலசிவிட்டுதான் சாப்பிடுகிறார். இப்போது ஒரு புதிய வீடியோ வந்துள்ளது. களக்காடு வனப்பகுதியில் அவ்வளவு பவ்யமாக ஒரு குழந்தையை போல வனப்பகுதியில் அரிகொம்பன் உறங்கும் காட்சிதான் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அரிகொம்பனின் அடக்கத்தை பார்த்த உடனே, அடேய் அரிகொம்பன்! என்னா பவ்யம்டா! பச்சபுள்ளமாதிரி தூங்குறியே.. நீதானா அது.. நம்பவே முடியலையே! என கேட்காமலா இருக்க முடியும்!.. ம்ம்ம்.. நடக்கட்டும்! நடக்கட்டும்!
Sleeping like a baby in rolling grasslands #Arikomban #TNForest @TNDIPRNEWS pic.twitter.com/xtOFtPGX1I
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 11, 2023
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications