கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்.. குத்தாட்டம் போட்ட நண்பர்கள்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்.. குத்தாட்டம் போட்ட நண்பர்கள்

Recommended Video

    கன்னியாகுமரி: மருத்துவமனையில் நண்பருக்கு சிகிச்சை… குத்தாட்டம் போட்டு குஷிப்படுத்திய பிரெண்ட்ஸ்!

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பரை பார்க்க சென்ற வாலிபர்கள் குத்தாட்டம் போட்டு நண்பரை மகிழ்வித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த குழித்துறை பகுதியை சேர்ந்தவர் சர்ஜின். மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட டிக்டாக்கில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் அடைந்த இந்த இவரது நண்பர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மார்த்தாண்டம் பகுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை

    சிகிச்சை பெற்று வரும் அவரை பார்ப்பதற்காக சர்ஜின் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பொதுவாக மருத்துவமனைக்குச் செல்லும் போது, பழம், குளுக்கோஸ் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், சர்ஜினும் அவரது நண்பர்களும் செய்த செயல்தான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    மருத்துவனையில் உற்சாக நடனம்

    மருத்துவனையில் உற்சாக நடனம்

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு உடல்சோர்வு காரணமாக குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இதன் காரணமாக படுக்கையில் நண்பர் சோர்வாக இருப்பதை கண்டு சர்ஜின், அவரை மகிழ்விக்கும் விதமாக செல்போனில் சுப்ரமணியபுரம் படத்தில் வரும், "மதுர குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டுப் பாடு" "புழுதி பறக்க பறக்க நீ போடாத ஆட்டம் போடு" பாடல் வரிகளை ஒலிக்க செய்து நண்பருடன் இணைத்து உற்சாக நடனமாடினர். இதையடுத்து சிகிச்சையில் இருந்த நபர் சற்று உற்சாகமடைந்தாலும் திடீரென நடந்த களோபரத்தால் மருத்துவமனையில் இருந்த சக நோயாளிகள் இன்னலுக்கு ஆளாகினர்.

    சக நோயாளிகள் அவதி

    சக நோயாளிகள் அவதி

    இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த மருத்துவப்பணியாளர்கள் சர்ஜின் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்த்தாக்க் கூறப்படுகிறது. இருந்தும் அடங்காத சேட்டை பிடித்த நபர்கள் , மருத்துவமனையில் நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

    சமூக ஆர்வலர்கள் கண்டனம்

    சமூக ஆர்வலர்கள் கண்டனம்

    நண்பரை மகிழ்விப்பதாக எண்ணி மருத்துவமனையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது மருத்துவமனையில் இருதயம் சம்பந்தப்பட்ட பிற சிகிச்சைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டி காட்டும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் மருத்துவமனை போன்ற இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்

    அடிக்கடி வீடியோ வெளியிடும் நபர்

    அடிக்கடி வீடியோ வெளியிடும் நபர்

    குத்தாட்டத்தில் ஈடுபட்ட சர்ஜின் சமீபத்தில் பெண் வேடமணிந்து மார்த்தாண்டம் பகுதியில் பெண்களுக்கான இலவச பேருந்தில் பயணம் செய்து நடத்துநரைக் கலாய்த்து வீடியோ வெளியிட்டதும் , வேகமாக உயரும் பெட்ரோல் டீசல் விலையுயர்வால் வாகனங்கள் வைத்திருக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானதை சிம்பாலிக்காக பனை நுங்கால் செய்யப்பட்ட 90-ஸ் கிட்ஸ் விளையாட்டு வண்டியை மார்த்தாண்டம் சாலைகளில் ஓட்டியும் அதை பெட்ரோல் பங்கிற்கும் கொண்டு சென்று கலாய்த்து வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Video footage of teenagers dancing and cheering while visiting a friend admitted for treatment at the Marthandam Private Hospital in Kanyakumari District is now going viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X