திமுக ரைடர்ஸ் குழு! 188 டூ வீலர்கள்! 504 பிரச்சார மையங்கள்! 234 தொகுதிகள்! 13 நாட்களில் 8,647 கிமீ!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகமெங்கும் 234 சட்டமன்ற தொகுதிகளையும் கவர் செய்யும் வகையில் பிரம்மாண்ட இரு சக்கர வாகன பிரச்சார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
மாநில உரிமைகளை மீட்க அழைக்கிறார் உதயநிதி என்ற முழக்கத்தோடு திமுக இளைஞரணி முன்னெடுக்கும் இந்த புதிய முயற்சிக்கு திமுக ரைடர்ஸ் குழு பக்கபலமாக நின்று முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி நாளை தொடங்கி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி வரை இரு சக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த 188 இரு சக்கர வாகனங்கள் இந்த பிரச்சார பயணத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதில் கலந்து கொள்பவர்களுக்கு மூன்று வேளையும் அறு சுவை உணவு, தங்குமிடம், தலைக்கவசம், கொள்கை முழக்க டி ஷர்ட், வாகன கொடிக்கம்பம், டிராவல் பேக், முதலுதவி சிகிச்சை மெடிக்கல் கிட், சோப்பு, சீப்பு, பேஸ்ட் கிட், குடிநீர் என எல்லாவிதமன அடிப்படை வசதிகளும் திமுக இளைஞரணி சார்பில் செய்துக் கொடுக்கப்படுகிறது.
திமுக ரைடர்ஸ் குழுவில் இணைந்து தமிழகமெங்கும் இரு சக்கர வாகன பிரச்சார பேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஷூ கட்டாயம் அணிய வேண்டும், கருப்பு அல்லது ஜீன்ஸ் பேண்ட் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமத்தின் நகலை கொடுக்க வேண்டும், வாகன உரிமைச் சான்று நகல் கொடுக்க வேண்டும் , வாகன காப்பீட்டு சான்று நகல் தர வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியில் நாளை இரு சக்கர வாகனப் பிரச்சார பேர்ணியை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி செல்லவுள்ளார். 13 நாட்களில் 8,647 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் பயண ரூட் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை சில நாட்களுக்கு முன்னர் தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கன்னியாகுமரிக்கே சென்று நேரில் பார்வையிட்டு வந்தார்.












Click it and Unblock the Notifications