ஜொலிக்கும் வந்தே பாரத் ரயில் சேவை.. நெல்லைக்கு ஜாக்பாட்.. அடுத்து கன்னியாகுமரி.. "இது" நடந்தால், ஆஹா
கன்னியாகுமரி: திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுவது குறித்த மகிழ்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.. அதேசமயம், இதே வந்தே பாரத் ரயில் சேவையை, மையமாக வைத்து இன்னொரு முக்கிய கோரிக்கையும் தென்தமிழகத்தில் எதிரொலிக்க துவங்கி உள்ளது.
கடந்த 2022-ம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.. இப்போது 18 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வரும் 26ம் தேதி இன்னும் 6 வந்தே பாரத் ரயில்கள் புதிதாக தனது சேவையை தொடங்க இருக்கின்றன.. வந்தே பாரத் திட்டமானது, பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், ஒவ்வொரு சேவையையும் தானே நேரடியாக சென்று திறந்து வைத்து வருகிறார்.
தமிழ்நாடு: இந்த வாரத்தில் இன்னும் 6 சேவையை துவக்கி வைக்கும்போது, வந்தே பாரத் ரயில் மொத்த எண்ணிக்கை 24 ஆக உயரக்கூடும்.. நம்முடைய தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.
அடுத்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு வெகுவிரைவில் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. இந்த பெட்டியை வைத்து தெற்கு ரயில்வே திருநெல்வேலி - சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக 4 நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் எல்.முருகனும் அறிவித்திருந்தார்.. இந்த அறிவிப்பானது, தென் மாவட்ட மக்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அதேசமயம், இந்த ரயில் சேவையை கன்னியாகுமரியை மையமாக வைத்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்க துவங்கி உள்ளது.
மின்மயமாக்கல்: காரணம், சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள வழித்தடத்தில் சென்னை முதல் திருநெல்வேலி வரை முழுவதும் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. நெல்லை முதல் மேலப்பாளையம் வரையிலும், ஆரல்வாய்மொழி முதல் கன்னியாகுமரி வரை உள்ள இடங்களில் இந்த இரட்டைபாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் நெல்லை இடையே இரட்டை ரயில் பாதை பணிகளும் இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டதால், விரைவில் இந்த பணியும் முடிந்துவிடும். அப்படியிருக்கும்போது, வந்தே பாரத் ரயில் சேவையை நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை என இயக்கினால் கூடுதல் பலனாக இருக்கும் என்பதே ரயில் பயணிகள் சங்கங்களின் கோரிக்கையாக எழுந்திருக்கிறது.
இடநெருக்கடி: அதுமட்டுமல்லாமல், நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் நடைமேடை, பிட்லைன், ஸ்டேபளிங்லைன் போன்ற இடநெருக்கடி பிரச்சனையால் தவித்து வருகிறது... இந்த இடத்தில், புதிய நடைமேடை மற்றும் ஸ்டேபளிங் லைன்கள் அமைக்கும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இந்த பணிகள் முடிந்த பிறகு குமரிக்கு வந்தேபாரத் ரயில்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற குஷி தகவலும் றெக்கை கட்டி பறக்கிறது.
திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையின் கால அட்டவணையும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதில் இந்த ரயில் திருநெல்வேலியிருந்து காலையில் புறப்பட்டு மதியம் சென்னை சென்று விட்டு, மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு திருநெல்வேலி வந்து சேருமாறு காலஅட்டவணை அமைத்து இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குஷியில் நெல்லை: இந்த ரயிலின் பராமரிப்பு பணிகள் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வைத்து இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்காக ரயில் பராமரிப்பு செய்யும் பிட் லைன்களில் மின்சார கம்பிகள் பொருத்தும் பணிகள் அதி வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். இந்த பணிகள் நிறைவு பெற்றதும் திருநெல்வேலியிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications