கன்னியாகுமரியில் நிவாரணப் பணிகள்; வேகம் போதாது; இன்னும் தீவிரம் தேவை; வேல்முருகன் வேண்டுகோள்!
கன்னியாகுமரி: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பழையாறு, தாமிரபரணி ஆறு, இரணியல் வள்ளியாறுகள் நிரம்பியதை அடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன.
வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல், வாழை, ரப்பர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தாழாக்குடி, செண்பகராமன்புதூர், சுசீந்திரம், தோவாளை, பரசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள 19 முகாம்களில், 500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொது மக்களை மீட்க விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் பாத்திரங்கள், உணவுப்பொருட்களை இழந்து வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு, தடையின்றி உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு, உணவு, மாற்று உடைகள் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும், துயரமிகுந்த இந்த பேரிடர் காலத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மழை வெள்ளப் பாதிப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications