விஜயதரணியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்! மிகப் பெரிய துரோகம்! விஜய் வசந்த் ஆவேசம்!
கன்னியாகுமரி: விஜயதரணியை ஒரு போதும் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆவேசம் காட்டியுள்ளார்.
விஜய் வசந்தா இப்படி பேசுவது என்று ஆச்சரியப்படும் வகையில் விஜயதரணிக்கு எதிராக இப்படி அனல் கக்கியுள்ளார். விஜயதரணி மாற்றுக்கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், செய்த மிகப்பெரிய துரோகம் என்றும் என்றும் விஜய் வசந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக விஜய் வசந்தை பொறுத்தவரை பொறுமையான சுபாவம் கொண்டவர். யாரையும் அவ்வளவு எளிதாக விமர்சிக்கமாட்டார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதவர். நேற்று வரை விஜயதரணியை அக்கா என்று குறிப்பிட்டு அழைத்தவர், இன்று அவர் பாஜவில் சேர்ந்த தகவலை அறிந்து தனது ஆதங்கத்தை சமூக வலைதளப் பக்கங்களில் கொட்டித் தீர்த்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் சீட் எதிர்பார்த்து கடும் முயற்சிகளை மேற்கொண்டார் விஜயதரணி.
ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. வசந்தகுமாருக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இதையடுத்து வசந்தகுமார் மறைவுக்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி.சீட் வாங்க மீண்டும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதும் அந்த முயற்சியில் தோல்வி மட்டுமே மிஞ்சியது. விஜய் வசந்துக்கு காங்கிரஸ் மேலிடம் எம்.பி.சீட் கொடுத்தது. தொடர்ந்து வசந்தகுமார் குடும்பத்திடம் அவரால் வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் வசந்தகுமார் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. இந்த தகவலை ஒன் இந்தியா தமிழ் கூட சுட்டிக்காட்டியிருந்தது. இந்நிலையில் தான் அந்த விரக்தியில் விஜயதரணி பாஜகவில் ஐக்கியமாகி காங்கிரஸ் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே விஜயதரணியின் இந்த இணைப்பு நிகழ்வை பாஜகவில் உள்ள சீனியர்கள் சிலரே விரும்பவில்லை எனத் தெரிகிறது.
அதேபோல் விஜயதரணி பாஜகவில் இணைந்தது பற்றி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள திமுக எம்.பி. செந்தில்குமார், இதெல்லாம் ஒரு நாள் கூத்து, பிள்ளை பிடிக்கும் கூட்டத்தை போல் பாஜக எம்.எல்.ஏ.க்களை பிடிப்பதாக சாடியுள்ளார். மேலும், டாக்டர் சரவணன், கு.க.செல்வம் ஆகியோருக்கு பாஜகவில் என்ன நடந்தது என்பதை இந்த நாடறியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications