லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த விஜயதாரணி! அதிகாரிகளுக்கு போனில் டோஸ்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காலை முதலே ரவுண்ட்ஸில் இருந்த விஜயதரணி எம்.எல்.ஏ., நிவாரணப் பணிகளில் மெத்தனம் காட்டிய அதிகாரிகளை போனில் அழைத்து கடுமையாக டோஸ் விட்டிருக்கிறார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.தானே என்ன செய்வார் என நினைக்கிறீர்களா என்றும், உங்களால் மக்களிடம் தனக்குத் தான் கெட்டப்பெயர் ஏற்படுவதாகவும் அவர் கொதித்தெழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே குமரி மாவட்டத்துக்கு மழை வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வந்த முதல்வர், தனது விளவங்கோடு தொகுதிக்கும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர் ஆய்வு செய்ய வராதது தனக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

விளவங்கோடு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் விஜயதரணி. 11 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருப்பதால் விளவங்கோடு தொகுதி முழுவதும் இவருக்கு அத்துப்படி. விளவங்கோடு தொகுதியை பொறுத்தவரை தமிழகத்தின் கடைக்கோடி தொகுதி என்றுக் கூட சொல்லலாம். மலைபாங்கான பகுதி என்பதால் அடிக்கடி நிலச்சரிவு, மண் அரிப்பு என பேரிடர்களால் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

அதிகாரிகளுக்கு டோஸ்
அந்த வகையில் கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக விளவங்கோடு தொகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இது தொடர்பான மழைவெள்ள நிவாரணப் பணிகளில் விஜயதரணி ஆர்வம் காட்டவில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து, அது குறித்து ஊடகங்களில் செய்தியும் வெளியானது. இந்நிலையில் இன்று பம்பரமாக சுழன்று தொகுதி மக்களை சந்தித்து வருவதுடன் செயல்படாத அதிகாரிகளுக்கு டோஸும் விட்டுள்ளார்.

விஜயதரணி உறுதி
பாகோடு பேரூராட்சிக்குட்பட்ட புளியக்குளம் பகுதியில் வெள்ளநீரை வெளியேற்றாமல் அங்கிருந்து செல்லமாட்டேன் எனக் கூறி அவர் காட்டிய உறுதி அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. தாசில்தார் உட்பட வருவாய்த்துறை அலுவலர்களை அழைத்து இன்று ஆய்வுக்கூட்டம் நடத்திய விஜயதரணி, முழுமையாக நிவாரணப் பணிகள் நிறைவடையும் வரை தாம் ரவுண்ட்ஸில் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

உள்ளூர் எதிரிகள்
உள்ளூரில் உள்ள அரசியல் எதிரிகள் தான் தன்னை பற்றி விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விஜயதரணி யார் என்பது தன்னை வெற்றிப்பெறச் செய்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் அதுவே அனைவருக்கும் நலமும் மகிழ்ச்சியும்.












Click it and Unblock the Notifications