Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்தியோதயா அன்னயோஜனா.. ரேஷன்கார்டு பெறுவதற்கான தகுதி என்னென்ன? அதிகாரிகள் தந்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன்கார்டு பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன? என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் ஏற்கனவே முன்னுரிமை அட்டை பெற்றவராக இருக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை பெறும் நபர்களுக்கு அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் ரேஷன் கார்டு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கார்கள், PHH, PHH - AAY, NPHH, NPHH-S போன்ற வகையில் வநியோகிக்கப்படுகின்றன.

ration card antyodaya anna yojana

இதில் PHH (Priority Household) அட்டையை பொறுத்தவரை பொருளாதார நிலையில் மிகவும் குறைவான குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டைதாரர்கள் தேசிய உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறப்புப் பொருட்களை, குறைந்த விலையில் பெறலாம். இந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழக்கமான அரிசி விநியோகம் இருக்கும்.

PHH - AAY (Antyodaya Anna Yojana): வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த வகை அட்டை வழங்கப்படுகிறது. அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் தான் இந்த கார்டு வழங்கப்படுகிறது. விதவைகள், தீராத நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், குறைந்தபட்ச வருமானம் இல்லாத முதியோர், மலைவாழ் குடும்பங்கள் பயன்பெறுகின்றன. அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 35 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. பெரியவர் ஒன்றுக்கு 4 கிலோ கிராம் , சிறியவர் ஒன்றுக்கு 2 கிலோ கிராம் (12 வயதிற்குள்) . ஒரு குடும்ப அட்டைக்கு குறைந்தபட்சம் 12 கிலோகிராம் மற்றும் அதிகபட்சம் 20 கிலோகிராம் வழங்கப்படுகிறது.

NPHH (Non-Priority Household) கார்டை பொறுத்தவரை குறைந்த வருமானம் அல்லது குறைந்த பொருளாதார நிலை இல்லாத குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டைதாரர்கள் மாநில அரசின் சில நலவாரிய திட்டங்களை மட்டும் பெறுவார்கள். இவர்கள் அரசு தரும் அனைத்து ரேஷன் கார்டு பொருள்களையும் பெறலாம்.

NPHH-S எனும் குறியீடு ரேஷன் அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் அரிசியை தவிர்த்து மற்ற அனைத்து பொருள்களும் வாங்கலாம்.

NPHH-NC எனும் குறியீடு இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு நியாய விலை கடையில் எந்த ஒரு பொருளும் வாங்க இயலாது. குடும்ப அட்டையை நீங்கள் ஏதோ ஒன்றிற்காக அடையாளத்திற்கோ அல்லது முகவரி சான்றாகவோ மட்டுமே வைத்துக்கொள்ள இயலும்.

இதில் பலரும் அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்.) திட்டத்தின்கீழ் கார்டு வாங்க விரும்புகிறார்கள். கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறையின்கீழ் செயல்படும் வழங்கல் அலுவலகத்தின் சார்பில் அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்.) திட்டத்தின்கீழ் 63 ஆயிரத்து 432 ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த ரேஷன் கார்டுகள் மூலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 595 பேர் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகள் பெறுவதற்கான தகுதி விவரம் குறித்து அதிகாரிகள் விளக்கம்அளித்துள்ளனர்.

அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் ஏற்கனவே முன்னுரிமை அட்டை பெற்றவராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அன்னபூர்னா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் பதிவு பெற்ற ரேஷன் கார்டுதாரர்களும் ஏ.ஏ.ஒய். திட்டத்தின்கீழ் வருவார்கள். அதேநேரம் வறுமைக்கோடு பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து நபர்களும் ஏ.ஏ.ஒய். கார்டு பெற தகுதியானவர்கள். முதியோர் உதவித்தொகை பெறும் நபர்கள் ஏ.ஏ.ஒய். திட்டத்தில் பயன்பெறலாம். விதவைகள் மற்றும் தனிநபராக வசிக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். 40 சதவீதத்துக்கு மேல் ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் கார்டு பெற முடியும். குடிசைவாழ் மக்கள், குடியிருப்பற்றவர்கள் போன்றோருக்கும் இந்த திட்டத்தின்கீழ் கார்டு பெறலாம்.

ஏ.ஏ.ஒய். ரேஷன் கார்டுகளை பொறுத்தமட்டில் அரிசி மற்றும் கோதுமை சேர்த்து ஒருங்கிணைந்த உரிம அளவாக 1 முதல் 7 வரையிலான உறுப்பினர்களைக் கொண்ட ஏ.ஏ.ஒய். வகை குடும்ப அட்டைகளுக்கு 35 கிலோவும், தொடர்ந்து கூடும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 5 கிலோ வீதம் கணக்கிட்டு வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+