லீலைகள்! பெண்களை மயக்க பாதிரியார் பயன்படுத்திய "டெக்னீக்".. கல்யாணம் பண்ண வந்தவங்களையும் விடலையாமே
காரில் வந்த சிலர் கடந்த வாரம் அவரை தாக்கி, பெனெடிக் ஆண்டோ லேப்டாப்பை திருடிவிட்டு சென்றனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய மதபோதகர் பெனெடிக் ஆண்டோ தலைமறைவாகி உள்ளார். இவர் தொடர்பாக பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள், விஷயங்கள் வெளியாகி உள்ளன.
முக்கியமாக இவர் பெண்களை மயக்கியது எப்படி? அதற்கு என்று அவர் பயன்படுத்திய முறைகள் என்னென்ன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென தலைமறைவாகி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தளம் ஒன்றில் பெனெடிக் ஆண்டோ பாதிரியாராக பணியாற்றி வந்தார். அழகியபுரம் அருகே இருக்கும் சர்ச் ஒன்றில் இவர் பணியாற்றி வந்து இருக்கிறார்.

என்ன நடந்தது ?
அவரின் லேப்டாப் சமீபத்தில் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. காரில் வந்த சிலர் கடந்த வாரம் அவரை தாக்கி, பெனெடிக் ஆண்டோ லேப்டாப்பை திருடிவிட்டு சென்றனர். இந்த நிலையில்தான் அவரின் லேப்டாப்பில் இருந்த பல அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த வீடியோக்கள் தொடர்பான பின்னணி கதைகளும் கூட தற்போது வெளியாகி உள்ளன. இந்த அந்தரங்க புகைப்படங்களை லேப்டாட்டை திருடியவர்கள் வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதிரியார் செய்த் தவறுகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர்கள் இதை திட்டமிட்டு செய்து இருக்கலாம். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கொண்டு வர வேண்டும் என்று இப்படி லேப்டாப்பை திருடி உண்மைகளை வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது?
இவர் பெண்களை மடக்கவும், தன்னிடம் வழிக்கு வராத பெண்களை தொல்லை செய்யவும், வீட்டில் இருந்து ஆண்கள் யாரவது பேசினால் அவர்களை சமாளிக்கவும் நிறைய வழி முறைகளை வைத்து இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி இவர் பல பெண்களிடம் போனில் பேசி வந்துள்ளார். முக்கியமான கல்லூரி மாணவியாக்களிடம் பேசி வந்துள்ளார். தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பேசி அவர்களின் போன் எண்களை வாங்கி உள்ளார். அதன்பின் அவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலம் பேசி உள்ளார். அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் ஆகி ஆபாசமாக பேச தொடங்கி உள்ளார். இவரின் பேச்சில் சில பெண்கள் அப்படியே மயங்கி உள்ளனர். இது அதன்பின் வீடியோ கால் வரை சென்றுள்ளது.

வீடியோ கால்
வீடியோ காலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி உள்ளார். அதோடு அவர்களை நிர்வாணமாக நிற்க சொல்லி அதை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்துள்ளார். இது போக பெண்களை தனியாக அழைத்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு இருக்கிறார். அதன்பின் இந்த ஆபாச வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி இருக்கிறார். அவர்களிடம் காசும் கேட்டு இருக்கிறார். இரண்டாவது முறைப்படி தன்னிடம் நெருங்கி பழகாத பெண்களிடம்.. நீ பாவம் செய்து இருக்கிறாய். பாவ மன்னிப்பு கொடுக்கிறேன் என்று கூறி சர்ச் அழைத்து அவர்களின் ரகசியங்களை கேட்டுள்ளார். அந்த ரகசியங்களை பயன்படுத்தி.. என் ஆசைக்கு இணங்க வில்லை என்றால் அதை உன் கணவர், அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி இணங்க வைத்துள்ளார்.

திருமணம்
இதனால் பெண்கள் பலரும் அந்த பெனெடிக் ஆண்டோ கேட்ட பணத்தையும், பாலியல் இன்பத்தையும் கொடுத்துள்ளனர். இப்படி வழிபாடு நடத்த வந்த பல பெண்களிடம் பெனெடிக் ஆண்டோ அத்துமீறி இருக்கிறார். இதோடு நிற்காமல் இவர் திருமணம் செய்து வைக்க செல்லும் இடங்களில் மணப்பெண்ணை கூட விட்டு வைக்கவில்லையாம். அங்கே இருக்கும் மணப்பெண்ணிடம் நெருங்கி பழகி, கடைசியில் அவர்களுடன் தனியாக குடும்பம் நடத்தியும் வந்து இருக்கிறார். இதை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் வீட்டில் இருக்கும் ஆண்கள் தட்டி கேட்டால்.. வீட்டுக்கு வாங்க பேசலாம் என்று கூறி கடைசியில் வீட்டில் திருட வந்துவிட்டார்கள் என்று கூறி போலீசில் மாட்டிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

புகார்
இவரின் வீட்டிற்கு தட்டி கேட்க சென்ற இரண்டு ஆண்களை உண்மையில் இப்படி அவர் மாட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இவரும் மதிப்புமிக்கவர் என்பதால் போலீசார் இவர் சொன்னதை நம்பி இருக்கின்றனர். இதெல்லாம் போக பல வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வைத்து.. வெளியே சொன்னால் உங்கள் குடும்ப மானம் போய்விடும் என்றும் மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில்தான் நர்சிங் படிக்கும் மாணவி ஒருவர் பெனெடிக் ஆண்டோ மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் போலீசார் விரைவில் பெனெடிக் ஆண்டோவை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது பெங்களூரில் தலைமறைவாகி உள்ளாராம். இரண்டு நாட்களாக அவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

வீடியோக்கள்
இவரின் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. ஆபாச வீடியோக்கள் பல அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. இவர் தற்போது அந்த கிறிஸ்துவ வழிபாட்டு தளத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வேறு மதபோதகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பல பெண்களை ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இவரிடம் ஏமாந்த மற்ற பெண்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதோடு பெண்கள் முன்வந்து புகார் கொடுக்க வேண்டும். அவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications