கன்னியாகுமரி அருகே பிரபல பள்ளியில் இன்ஜினியர் இருந்த கோலம்.. ஆடிப்போன உறவினர்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள ஆரணிவிளையில் பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் சிட்னிசன் மோரிஸ். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவருடைய மூத்த மகன் பெரில்சன் மோரிஸ் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். இவர் பள்ளி வளாகத்தில் இருந்த கோலம் உறவினர்களையும் நண்பர்களையும் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஆரணிவிளை என்ற கிராமம் அமைந்துள்ளது.இங்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் சிட்னிசன் மோரிஸ். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார. இவருடைய மூத்த மகன் பெரில்சன் மோரிஸ் (வயது 28), என்ஜினீயரிங் பட்டதாரி.

நேற்று முன்தினம் காலையில் சிட்னிசன் மோரிஸ் குடும்பத்தினர் ஆலயத்திற்கு செல்ல புறப்பட்டிருக்கிறார்கள். இதற்காக பெரில்சன் மோரிசை அழைத்த போது அவரை மட்டும் அங்கு காணவில்லை. பிறகு பெரில்சன் மோரிஸை தேடிய போது பள்ளி வளாகத்தில் ரத்த காயங்களுடன் அசைவற்று கிடந்தார். இதனை பார்த்ததும் துடிதுடித்து போன குடும்பத்தினர் கதறி அழுதார்கள்.
பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், பெரில்சன் மோரிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரில்சன் மோரிஸ் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி கட்டிட மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து சிட்னிசன் மோரிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பெரில்சன் மோரிஸ் சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. பள்ளி கட்டிடத்தில்இருந்து கீழே குதித்து இன்ஜினியர் உயிரைவிட்ட சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications