கன்னியாகுமரி புதுமண தம்பதி.. காதல் கல்யாணம் நடந்த 2 மாதத்தில்.. விளையாட்டுக்கு கூட இப்படி செய்யாதீங்க
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள மைகுளத்தான்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற பெண்ணும் கடந்த இரண்டு மாதம் முன்பு தான் காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்துள்ளது. அப்போது மனைவி கற்பனையிலும் நினைக்காத சம்பவத்தை செய்துள்ளார் புதுமாப்பிள்ளை.. மொத்த குடும்பமும் ஆடிப்போய் இருக்கிறது.
திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இடையே அவ்வப்போது புரிதல்கள் குறைவு காரணமாக தகராறு ஏற்படுவது உண்டு. அந்த தகராறுகள், சண்டைகள், கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்புகளாக இருக்கும். ஆனால் அந்த சண்டையில் உன் ஈகோ பெரியதா.. என் ஈகோ பெரியதா என்று மோதிக்கொள்கிறார்கள். கடைசியில் இந்த சண்டையில் பெற்றோர்கள் நுழையும் போது, பெரிய பிரச்சனையாக மாறுகிறது. கடைசியில் இருவரும் பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதேபோல் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படும் போது, புரிதல் குறைவு காரணமாக சண்டைகள் ஏற்படும் போது இருவரும் மாறி மாறி விட்டுக் கொடுத்து சென்றாலும் பிரச்சனைகள் வருவது இல்லை.. மாறாக ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நிலை வந்தாலும் அது குடும்பத்தை வெகுவாக பாதிக்கிறது. இதேபோல் காதலித்து திருமணம் செய்தவர்கள், திடீரென ஏற்படும் சண்டையில் கோபித்துக் கொண்டு மனைவி கணவனை பிரிந்து செல்லப்போவதாக அறிவிக்கும் போது அல்லது மனைவியை கணவன் பிரிந்து செல்வதாக உணர்ச்சி வேகத்தில் அறிவிக்கும் போது, விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே நடந்துள்ளது. திருமணம் ஆன வெறும் இரண்டு மாதத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே மைகுளத்தான்கரை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் சுரேஷ். இவருக்க 28 வயது ஆகிறது. மீன்வலை கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். மெக்கானிக் சுரேஷ், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கோபிகா (25)என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் கடந்த கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜவகர் காலனி என்ற பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த டிசம்பர் 20ம் தேதி கோபிகா மனஸ்தாபம் காரணமாக தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறி துணிமணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட தயாரானார். சுரேஷ் அவர் போகக்கூடாது என கூறினாராம்.. இதற்காக எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் ஏற்காததால், அவரை பயமுறுத்த நினைத்த சுரேஷ் அங்கிருந்த டீசலை எடுத்து தனக்குத்தானே உடலில் ஊற்றினார். பின்னர் விளையாட்டுத்தனமாக தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்துள்ளார். அது எதிர்பாராதவிதமாக பற்றிக்கொண்டது.
மனைவியின் கண் முன்னே தீ உடல் முழுவதும் பரவி அலறி துடித்த நிலையில் உயிருக்கு போராடினார் சுரேஷ். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிகா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று காலையில் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications