பிஎம் கிசான் பணம் வராதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 20-வது தவணையை பெற விவசாயிகள் செய்ய வேண்டியவை
கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகம், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள், பொது சேவை மையங்களில் 31ம் தேதி முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பி.எம்.கிசான் திட்டத்தில் நில பதிவு, இ.கே.ஒய்.சி. பதிவு மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு பணியை மேற்கொண்டால் மட்டுமே 20-வது தவணையை விவசாயிகள் பெற இயலும்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகம், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திட்டத்தில் 20-வது தவணை வரும் ஜூன் மாதத்தில் விடுவிக்கப்பட்டு வரவு வைக்கப்பட உள்ளது.

எனவே இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது மற்றும் இ.கே.ஒய்.சி. செய்தல் போன்ற இவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதனை சரி செய்து விவசாயிகள் பயன் பெறலாம். மேலும் விடுபட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் புதிதாக பதிவு செய்து பயன் பெறலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பி.எம்.கிசான் 19 தவணை தொகை பெற்று வந்த 24 ஆயிரத்து 5 விவசாயிகள் தங்களது நிலப் பதிவு செய்யாமலும், 933 விவசாயிகள் இ.கே.ஒய்.சி. செய்யாமலும் மற்றும் 430 விவசாயிகள் ஆதாருடன் வங்கி கணக்கை இணைப்பு செய்யாமலும் உள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தில் நில பதிவு, இ.கே.ஒய்.சி. பதிவு மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு பணியை மேற்கொண்டால் மட்டுமே 20-வது தவணை பெற இயலும் என்பதால் இந்த முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.
மேலும் இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளி இறந்து விட்டால் அவரது ஆதார் எண் மற்றும் இறப்பு சான்றை சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சமர்ப்பித்து நிதியை நிறுத்தம் செய்ய வேண்டும். இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியிருப்பின் தேவையான ஆவணங்களை பொது சேவை மையங்களில் சமர்ப்பித்து பதிவு செய்து பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகம், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள், பொது சேவை மையங்களில் 31ம் தேதி முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பி.எம்.கிசான் திட்டத்தில் நில பதிவு, இ.கே.ஒய்.சி. பதிவு மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு பணியை மேற்கொண்டால் மட்டுமே 20-வது தவணையை விவசாயிகள் பெற இயலும் என்று அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications