Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் படிப்பை கைவிட்ட அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவி.. இப்படியுமா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனியைச் சேர்ந்த 15 வயதாகும் மீனாட்சி என்ற மாணவி அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் முதல் பள்ளிக்குச் செல்லவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தியது ஏன் என்று அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்தனர். அதன்பிறகு அந்த மாணவி எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.

இன்றைக்கு எந்த மாணவனும், மாணவியும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 10-ம் வகுப்புடன் கூட யாரையும் நிற்காமல் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உயர்கல்வி வரை பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது.

What happened to Sangeetha a 10th grade student who dropped out of school in Kanyakumari

அதேநேரம் இன்றும் சில அரசு பள்ளி மாணவ, மாணவிகள், 9ம் வகுப்பு, 10ம் வகுப்பில் வரும் போது படிப்பை பாதியில் கைவிடுகிறார்கள். இதனை கவனித்து , அந்த மாணவ, மாணவிகளைமீண்டும் படிக்க வைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதற்காக அரசு அதிகாரிகள் நேரில் சென்று விசாரிப்பதும் வழக்கம். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலணியைச் சேர்ந்த 40 வயதாகும் வீரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளர் ஆவார். இவரது மனைவி கவிதாவிற்கு 35 வயது ஆகிறது.இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். இதில் மகள் மீனாட்சிக்கு 15 வயது ஆகிறது.இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாணவி பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து படிப்பை பாதியில் கைவிட்டது குறித்து விசாரிக்கும் அரசு குழுவினர் மாணவியின் வீட்டிற்கு சென்று ஏன் வரவில்லை என்று விசாரித்தனர்.

அதன்பிறகும் மாணவி பள்ளிக்கு போகவில்லை. இந்த விவகாரத்தில் மாணவி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று காலையில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். சகோதரர்களும் வீட்டில் இல்லை.. மீனாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் மாணவியை பார்க்க கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் வந்துள்ளார். அவர் வீட்டின் வெளியே நின்று மாணவியை பெயரை சொல்லி அழைத்ள்ளார். ஆனால் எந்த பதிலும்வரவில்லை. உடனே மாணவியின் உறவினரிடம் வந்த அதிகாரி கூறியுள்ளார். இதையடுத்து அந்த உறவினர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மீனாட்சி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். ஆரல்வாய்மொழி போலீசார் நேரில் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் முடிவுக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகிறதார்கள். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+