இது தான் கன்னியாகுமரி பெண்கள்.. புத்தம் புதிய டாஸ்மாக் கடையில் நடந்த தரமான சம்பவம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு மாம்பிளியாகுளம் பகுதியில் நேற்று மாலையில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு மும்முரமாக நடந்தது. ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு டாஸ்மாக் ஊழியர்கள் வந்தனர். பின்னர் கடைக்குள் மதுபாட்டில்களை வைத்து விட்டு விற்பனையை தொடங்க இருந்தனர். ஆனால் புத்தம் புதிய டாஸ்மாக் கடையை திறக்க தக்கலை பெண்கள் கடுமையாக எதிர்த்தனர். இறுதியாக சல்லி சல்லியாக நொறுக்கி அனுப்பி வைத்தனர்.
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பது எளிதானது இல்லை.. அதேபோல் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகள் திறப்பதும் எளிதானது கிடையாது. ஏனெனில் மதுக்கடைகளில் திறக்க அந்த பகுதி மக்கள் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக கிராமங்களில் புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதோ, அல்லது ஏற்கனவே உள்ள கடையை இடமாற்றம் செய்வதோ கடுமையான சவால் நிறைந்தது. மக்கள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.

மதுக்கடை வந்தால் என்னாகும்
ஒரு டாஸ்மாக் கடை ஒரு கிராமத்தில் வந்தால், அந்த கிராமத்தில் ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 200 முதல் 500 வரை வீடு வராது. உடல் நலனும் கடுமையாக பாதிக்கப்படும். சந்தேகம், மனக்குழப்பம், வறுமை, வேலைக்கு போகாமல் வருவாய் இழப்பு என பல துயரங்கள் வரும். அதுமட்டுமின்றி குடிமகன்களின் அட்டகாசத்தால், சாலையில் பாதுகாப்பாக பெண்கள் நடமாட முடியாத நிலையும் ஏற்படும். அதுமட்டுமின்றி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால், அந்த சாலையில் விபத்து அபாயமும் அதிகம். அதேபோல் அந்த பகுதி முழுவதையும் குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துவார்கள். இதுபோன்ற காரணங்களால் மக்கள் டாஸ்மாக் கடைகள் அமைக்க கடுமையாக எதிர்க்கிறார்கள்.
புதிய டாஸ்மாக் கடை திறக்க முடியாது
ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு டாஸ்மாக் தான் மிகப்பெரிய வருமான ஆதாரமாக உள்ளதால், அது மூடப்படுவது சாத்தியமே இல்லை என்கிற நிலை இருக்கிறது. அதேநேரம் புதிதாக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்காமல் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கடைகளை இடமாற்றம் செய்யும் போது, அந்த புதிய இடத்தில் மக்கள் எதிர்ப்பது வாடிக்கையாக உள்ளது. அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி தக்கலை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு மாம்பிளியாகுளம் பகுதியில் நேற்று மாலையில் டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது. ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு டாஸ்மாக் ஊழியர்கள் வந்தார்கள். பின்னர் கடைக்குள் மதுபாட்டில்களை வைத்து விட்டு விற்பனையை தொடங்க ரெடியாக இருந்தார்கள்.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
அப்போது கிராம மக்கள் ஊருக்குள் திடீரென டாஸ்மாக் கடை திறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் உள்பட ஏராளமானோர் கடையின் முன்பு திரண்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக திக்கணங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் அருளானந்த ஜார்ஜ், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர் ஆகியோரும் விரைந்து வந்தனர்
மதுபாட்டில்களை உடைத்தனர்
இதனை தொடர்ந்து மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அந்த சமயத்தில் திடீரென கடைக்குள் புகுந்த அவர்கள் மதுபாட்டில்களை தூக்கி வெளியே ஆவேசமாக வீசினர். மேலும் கடையை இழுத்து பூட்டினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டாஸ்மாக் இழுத்து பூட்டப்பட்டது
பெண்களின் ஆவேசத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடையில் இருந்த மதுபாட்டில்களை எடுத்துச் செல்லும்படி போலீசார், ஊழியர்களிடம் கூறினர். உடனே ஊழியர்களும் மதுபாட்டில்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். ஊருக்குள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் இழுத்து பூட்டிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications