படித்தது 10.. வயது 25 .. ஒரு வேலையும் இல்லை.. ஒரு தலைக் காதல்.. கடைசியில் தற்கொலை!
ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி: ஒரு தலை காதல் தோல்வி இளைஞர் இரண்டு முறை தற்கொலை முயற்சி மூன்றாவதாக ரயிலில் தலை வைத்து தற்கொலை. தற்கொலைக்கு முன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம்அருகே பரக்குன்று பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 25 வயதாகிறது. படித்ததோ 10 -ம் வகுப்பு வரைதான். எந்த வேலைக்கும் போவது இல்லை. காலையில் இருந்து ராத்திரி வரை ஊர் சுற்றி வருவதுதான் இவரது வேலையே.
இதில், கடந்த ஒரு மாசமாக குடியும் சேர்ந்து கொண்டது. முழு நேரமும் போதையிலேயே இருந்துள்ளார். மகன் இப்படி இருப்பதை பார்த்து கவலையும், அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர் என்ன ஏதென்று விசாரித்தனர்.

யார் அந்த காதலி?
அதற்கு ஒரு பெண்ணை விரும்புவதாகவும், ஆனால் அந்த பெண்ணுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டதாகவும் கூறினார். உடனே பெற்றோரும், அந்த பெண் யார், நாங்கள் போய் பேசிப் பார்க்கிறோம் என்று கேட்டனர். ஆனால் காதலி குறித்த விவரத்தை பிரசாந்த் சொல்லவே இல்லை.

போலீசார் அட்வைஸ்
இந்நிலையில் போன வாரம், குழித்துறை மேற்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற பிரசாந்த், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அங்கிருந்த பயணிகள் அவரை காப்பாற்றி போலீசுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்தபோலீசும், தற்கொலைக்கான விவரத்தை கேட்டதற்கு காதல் தோல்வி என பிரசாந்த் சொன்னதால், அவருக்கு அட்வைஸ் சொல்லி அனுப்பி வைத்தனர்.

விஷம் குடித்தார்
ரயில் முன்னாடி பாய்ந்து தற்கொலை செய்ய முடியாததால், வீட்டுக்கு வந்த பிரசாந்த், விஷம் குடித்துவிட்டார். இதை பார்த்த பெற்றோர் உடனடியாக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரை கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக அவரை காப்பாற்றி வீட்டுக்கு கூட்டி வந்தனர் பெற்றோர்.

தலையை வைத்தார்
ஆனால் திரும்பவும் அதே ரயில்வே ஸ்டேஷனுக்கு விடிகாலை வந்த பிரசாந்த், தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து கொண்டார். அப்போது வேகமாக வந்த ரயில் மோதியதில் பிரசாந்த் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

வீடியோ காட்சி
மேலும், போன முறை பிரசாந்த் ரயில்வே ஸ்டேஷனில், தற்கொலைக்கு முயன்ற காட்சியும், அப்போது போதையில் பிரசாந்த் தற்கொலை செய்ய போவதாக உளறிய காட்சியையும் பயணிகள் வீடியோவாக எடுத்திருந்தனர். அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications