உல்லாசத்திற்கு மட்டும்.. கல்யாண பேச்சுக்கு ஜகா வாங்கிய காதலன்.. வயிற்று வலியால் காதலி மர்ம சாவு?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருகே நித்திரவிளை அருகே காதலனை காதலி ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இதே மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் பாறசாலை என்ற இடத்தில் வேறு ஒரு வசதியான வீட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதற்காக காதலனை தவிர்க்க நினைத்து அது முடியாமல் போகவே காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்தில் அது போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (56), கூலித் தொழிலாளி. இவருக்கு தங்கபாய் (51) என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் இரண்டு பேருக்கு திருமணமாகிவிட்டது.

3ஆவது மகள்
இவர்களது மூன்றாவது மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் பள்ளியில் படிக்கும் போதே நித்திரவிளை பகுதியை சேர்ந்த வருண் என்பவரை காதிலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலன் வருண் மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் இச்சைக்கு அந்த பெண்ணை பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

3 மாதங்களுக்கு முன்பு
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வருணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1 ம் தேதி காலை திடீரென மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.

சிகிச்சை பலனின்றி இறந்த மாணவி
இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை அழைத்து கொண்டு மார்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர். மூன்று நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து 4- ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காதலன் ஏமாற்றியதால் விரக்தி
இதனையடுத்து மாணவியின் தாயார் தங்கபாய் நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் மாணவியே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பாறசாலை சம்பவம் போல் அந்த மாணவிக்கு காதலனே ஸ்லோ பாய்சனை கொடுத்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா எல்லையில் நடந்தது என்ன?
தமிழக கேரளா எல்லையில் பாறசாலை எனும் இடத்தில் ஷாரோன் ரா்ஜ்- கிரீஷ்மா ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு கிரீஷ்மாவின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு வலுத்தது. இதனிடையே கிரீஷ்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அவர் பணக்காரர் என்பதால் கிரீஷ்மாவின் மனம் காதலைவிட பணத்தின் பக்கம் சாய்ந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தனது விருப்பத்தை ஷாரோன் ராஜிடம் கூறியும் "நீ எப்படி புதிய மாப்பிள்ளையுடன் வாழ்ந்து விடுவாய் என்பதை பார்க்கிறேன்" என மிரட்டியதாக கிரீஷ்மா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். அதனால்தான் ஷாரோனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாகவும் கிரீஷ்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications