'எந்த கடையிலும் கிடைக்காத சூப்பர் பைக் சார்'.. கன்னியாகுமரி போலீஸை திகைக்க வைத்த பொல்லாதவன் நிதின்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பார்த்து தப்பி ஓடிய இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல கடைகள் ஏறி இறங்கியும் எந்த பைக்கும் பிடிக்கவில்லை.. இந்த பைக்கை பார்த்த உடன் பிடித்துப்போனதால் திருடினோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே தங்கநாடார் நகரை சேர்ந்த 21 வயதாகும் ரிஷி என்பவர் அந்த பகுதியில் உள்ள கோழிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அண்மையில் இரவு நேரத்தில் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை தங்க நாடார் நகரில் உள்ள ஒரு வெல்டிங் கடையின் அருகில் நிறுத்தி வைத்திருக்கிறார். மறுநாள் காலையில் பார்த்தபோது அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து ரிஷி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்க தொடங்கினார். சிசிடிவி காட்சியில் பார்த்த போது, நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ரிஷியின் மோட்டாா் சைக்கிளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.
அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதுஒருபுறம் எனில், சுசீந்திரம் போலீசார் ஆண்டார்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகே அண்மையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது, இருசக்கர வாகனத்தை திருடியவர்களுடன் தொடர்புடைய 2 பேர் வருவதை போலீசார் கண்டனர். உடனே அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கொடங்காவிளா அருகே உள்ள தவளக்குளம் பகுதியை சேர்ந்த நிதின் (19), நெய்யாற்றின்கரை தனோசரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் புத்தளம் அருகே தங்கநாடார் நகரில் திருட்டுபோன ரிஷியின் மோட்டார் சைக்கிளை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், நிதின் தனக்கு மோட்டார் சைக்கிள் விலைக்கு வாங்குவதற்காக தனது நண்பர்களான 16 வயது சிறுவன் உள்பட 4 பேருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு போயிருக்கிறார்.
நிதின் பல பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடைகளில் ஏறி இறங்கியிருக்கிறார். ஆனால் நிதினுக்கு பிடித்தமான இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அவர்கள் நள்ளிரவில் தங்கநாடார் நகர் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரிஷியின் பைக்கை பார்த்த உடனேயே நிதினுக்கு பிடித்து விட்டது. உடனே நிதின் நண்பர்களுடன் சேர்ந்து அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று பதிவெண் பிளேட்டை மாற்றி ஓட்டி வந்திருக்கிறார்.
இதையடுத்து சுசீந்திரம் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர் படுத்தினாரகள். மாஜிஸ்திரேட்டு , பைக்கை திருடிய நிதினை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். மற்றொருவர் 16 வயது சிறுவன் என்பதால் அவரை ஜாமீனில் விட உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நிதினை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications