55 வயது பெண்ணை கொன்ற 70 வயது முதியவர்.. என்ன காரணம்?.. கரூரில் பயங்கரம்
கள்ளக்காதலியை வெட்டிக் கொன்ற 70 வயது முதியவர் கைதானார்
கரூர்: 70 வயது தாத்தாவுக்கு 55 வயது பழனியம்மாளுடன் கள்ளக்காதல்.. அத்துடன் சந்தேகமும் வந்துவிட்டது.. அரிவாளை எடுத்து பழனியம்மாளை வெட்டி கொன்றுவிட்டார் தாத்தா..!
கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ளது சேவாப்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பொன்னுச்சாமி.. இவரது மனைவி பழனியம்மாள்.. 55 வயதாகிறது..
இதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.. இவருக்கு மணிநாயக்கர் என்று இன்னொரு பெயர் உள்ளது.. 70 வயதாகிறது.

பழனியம்மாள்
இந்த தாத்தாவுக்கும் பழனியம்மாளுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. அதுவும் 30 வருஷமாகவே இருந்துள்ளது.. இவர்களின் கள்ளக்காதல் தாத்தா வீட்டுக்கும் தெரியுமாம்.. பழனியம்மாள் வீட்டுக்கும் தெரியுமாம்.. ஆனாலும் எதை பற்றியும் இவர்கள் கவலைப்படாமல் உறவில் தொடர்ந்து இருந்து வந்துள்ளதாக தெரிகிறது,.

விடிகாலை
இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாகவே தாத்தாவுடன், பழனியம்மாள் பேசுவதில்லையாம்.. பலமுறை பழனியம்மாளிடம் தாத்தா பேச முயற்சி செய்தாராம்.. ஆனால், பழனியம்மாள் தான் அவரை கண்டுகொள்ளவே இல்லையாம்.. இதனால், நேற்று விடிகாலை 4 மணிக்கு பழனியம்மாளிடம் பேசுவதற்காக அவர் வீட்டுக்கு சென்றார் தாத்தா.. தூங்கி கொண்டிருந்த பழனியம்மாளை எழுப்பி தன்னுடன் பேசுமாறு கேட்டுள்ளார்.

கொலை
ஆனால், பழனியம்மாள் அப்போதும் பேசவில்லை.. இதனால் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.. அப்போது தாத்தா, "என்னை ஏமாத்திட்டியா? வேற ஆளை ரெடி செய்துட்டியா" என்று கேட்டுக் கொண்டே ஒரு அரிவாளை எடுத்து, பழனியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்திலேயே சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் துடிதுடித்து இறந்துவிட்டார்..

அதிர்ச்சி
இந்த சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து வயதான கள்ளக்காதலன் ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... கொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டத்துக்காக ஆஸ்பத்திரி அனுப்பிவைத்துள்ளனர். 55 வயது பெண்ணை 70 வயது தாத்தா முதியவர் வெட்டிக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications