செந்தில் பாலாஜி ஒரு கொரோனா வைரஸ்.. அதிமுக சாபம் சும்மா விடுமா?.. அதான் சீல் வச்சாங்க.. வைகைச்செல்வன்
கரூர்: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஒரு கொரோனா வைரஸ் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழாவின் போது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கலந்து கொண்டு பேசினார். இந்த விழா நேற்று நடைபெற்றது.
அவர் பேசுகையில் மக்களவை தேர்தலின் போது திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என போலியான வாக்குறுதிகளை அளித்தது.

பணம்
இதை நம்பி மக்களவை தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் இதை தேர்தல் முடிவுகள் மூலம் உணர்ந்த மக்கள் இடைத்தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். உறவினர்களோடு சேர்ந்து போக்குவரத்து கழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

துரோகம்
சுமார் 95 லட்சம் பணத்தை ஏமாற்றி பெற்றதால் அவர் தற்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார் கொரோனா வைரஸ் எனப்படும் செந்தில் பாலாஜி. சென்னையில் வீட்டையெல்லாம் சீல் வைத்துவிட்டார்கள். அதிமுகவுக்கு துரோகம் செய்தால் அதன் பாவம் சும்மா விடுமா. அதுதான் வீட்டை சீல் வைத்துவிட்டார்கள்.

திமுக டூ அதிமுக
திமுகவிலிருந்து அதிமுகவுக்கும் , அதிமுகவிலிருந்து அமமுகவுக்கும், அமமுகவிலிருந்து திமுகவுக்கும் அவர் கட்சி தாவுவது என்பது புதிதல்ல என வைகைச்செல்வன் தெரிவித்தார். செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவியை பெற்றார். பின்னர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்று வெற்றியும் கண்டார்.

சசிகலா
கடந்த 2011- 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அவர் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தார். இதை கேள்விப்பட்ட ஜெயலலிதா அவரை அப்பதவியிலிருந்து நீக்கினார். பின்னர் 2016-ஆம் ஆண்டு சசிகலாவின் வற்புறுத்துதலின்பேரிலேயே செந்தில் பாலாஜிக்கு சீட்டு வழங்கியதாக கூறப்படுகிறது.
-
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications