எங்கு பார்த்தாலும் வசூல்.. செந்தில் பாலாஜியால் கரூர் மாவட்டத்திற்கு தலைகுனிவு.. அண்ணாமலை ஆதங்கம்
கரூர்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கரூரில் பேசிய அண்ணாமலை, எங்கு பார்த்தாலும் கரூர் குரூப் என்கிற பெயரில் வசூல் செய்கிறார்கள். செந்தில் பாலாஜியால் கரூர் மாவட்டத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்ற. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். [Annamalai]

ஸ்டாலின் தம்பட்டம்
அப்போது பேசிய அவர், "இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம் என்று முதலமைச்சர் தம்பட்டம் அடிப்பார். 11 சதவீதம் வளர்ந்துவிட்டோம் என்கிறார். எங்கு 11 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது. விவசாயம் 3 சதவீதம் வளர்ச்சி தான் எட்டியுள்ளது. தண்ணீரே இல்லை. வாய்க்காலே வெட்டவில்லை. தூர் வாரவில்லை, புதிதாக அணை கட்டவில்லை.
அமராவதியின் உபரி நீதி அந்த கிராமங்களுக்கு எல்லாம் கொண்டு சென்றிருந்தால் விவசாயம் வளரும். எங்கேயும், எதுவும் செய்யாமல் தமிழ்நாடு எப்படிங்க வளரும். விவசாயத்தில் தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் 3 விழுக்காடு தான். செந்தில் பாலாஜி இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
கரூர் குரூப் வசூல்
பிறகு கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருக்கிறார். இன்றைக்கு கரூரில் இருந்து கோவையில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார். அதில் தவறு இல்லை. செந்தில் பாலாஜி ஏன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். புழல் சிறையில் 300 நாட்களுக்கு மேல் இருந்தார்.
சிறையில் இருந்து வந்து திரும்பியும் அதே வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். கோயம்புத்தூருக்கு சென்றால் கரூர் குரூப், சென்னை சென்றால் கரூர் குரூப் தான் உள்ளனர். 20 பேரை வைத்து கொண்டு டாஸ்மாக் முழுவதும் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். தலைநிமிர்ந்து நிற்க வேண்டியவர்கள் கரூர் மக்கள்.
தலைகுனிவு
கரூர் குரூப் என்கிற பெயரில் எங்கு பார்த்தாலும் 10 பேரை வசூலுக்கு வைத்துள்ளனர். டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு வசூலித்து கொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜியின் கரூர் குரூப்பால் மொத்த கரூர் மாவட்டத்திற்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஒரு எம்எல்ஏவால் மொத்த மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications