எனது இளைய பேரனின் ஆயுஷ்ய ஹோமம்.. ட்வீட் போட்ட எச் ராஜா.. ஜாலியாக கலாய்த்த நெட்டிசன்கள்
கரூர்: கரூரில் தனது இளைய பேரனுக்கு பெயர் சூட்டல் விழா நடத்திய பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜாவின் ட்வீட்டை நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்துள்ளனர்.
பாஜகவின் மூத்த நிர்வாகியாக உள்ள எச் ராஜா எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் கருத்துகளை சமூகவலைதளங்களில் தெரிவிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர் கருத்துகளுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்தும் வருகிறார்கள். இன்றைய தினம் இவர் கரூரில் உள்ள தனது இளைய பேரனின் ஆயுஷ்ய ஹோமம் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூர்வீகம் காரைக்குடி
எச் ராஜாவின் பூர்வீகம் காரைக்குடியாகும். இவரது வீட்டு விசேஷம் குறித்த புகைப்படத்தில் எச் ராஜாவின் மகள், மருமகன் ஆகியோர் தங்கள் குழந்தையுடன் உட்கார்ந்துள்ளனர். அங்கு யாகம் வளர்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்க அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டது.

ஜாலி கலாய்
எச் ராஜாவை எப்போதும் பங்கமாய் கலாய்த்த நெட்டிசன்கள் இன்று ஜாலியாக கலாய்த்துள்ளனர். வாழ்த்துக்கள். நல்ல மனிதாபிமான மனிதனாக வாழ வாழ்த்துகிறோம் என்கிறார் ஒரு வலைஞர்.

மக்கள்
உங்கள் பேரன் உங்களைப்போல் இல்லாமல் புத்தி கூர்மையுடன், அனைத்து மக்களையும் சமம் என நினைக்கும் கருணை உள்ளம் கிடைக்கப்பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்கிறார் இந்த வலைஞர்.

நெட்டிசன் கேள்வி
உங்கள் சொந்த ஊர் மேலட்டூர்தானே எதற்காக கரூர் சென்றீர்கள் என ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆயுஷ்ய ஹோமம்
எல்லாம் தமிழில் எழுதிவிட்டு இந்த ஆயுஷ்ய ஹோமம் னா என்னவென்று தமிழில் கொஞ்சம் விளக்கி சொல்றது.

வீரன்
அக்குழந்தையும் உங்களை போல் நல்ல வீரனாக வளர வாசுதேவ கிருஷ்ணன் அருள் புரியட்டும்.

வாழ்த்துகள்
குமரனுக்கு வாழ்த்துக்கள், அவனுக்கு மதவெறி ஊட்டாமல் நன்னெறியுடன் வளருங்கள்.

நீண்ட ஆரோக்கியத்துடன்
குழந்தை நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் வாழ எம்பெருமான் அனுக்கிரகம் செய்யட்டும் என்கிறார் இந்த வலைஞர். இவ்வாறு நிறைய பேர் எச் ராஜாவை ஜாலியாக கலாய்த்தும் வாழ்த்தியும் உள்ளனர்.
இந்த குழந்தை எச் ராஜாவின் மகள் வயிற்று பேரனாக இருக்கலாம் என்றும் அதனால் அவரது மாமியார் வீடான கரூரில் இந்த விழா நடந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. ஆயுஷ்ய ஹோமம் என்றால் குழந்தை பிறந்து ஓராண்டு ஆனவுடன் அக்குழந்தை நீண்ட ஆயுளுடன் இருக்கவும் நல்ல உடல்நலத்துடன் இருக்கவும் வாழ்த்தி அக்குழந்தைக்கு பெயர் சூட்டுதலாகும். இது பிராமண சமூகத்தினர் இந்த நடைமுறையை கடைப்பிடிக்கிறார்கள். பெரும்பாலானோர் எச் ராஜாவின் குழந்தைக்கு வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்துள்ளனர்.

பங்கேற்பு
இது போல் ஏற்கெனவே எச் ராஜா வீட்டில் அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் 60 ஆவது திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வு 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வராக இருந்த ஓ பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications