மக்கள் கடல் அலையில் மிதக்கிறேன்! மனம் திறந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்! செந்தில் பாலாஜி ஹேப்பி!
கரூர்: கரூரில் தன்னை மக்கள் கடல் அலையில் மிதக்க வைத்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
செந்தில் பாலாஜியிடம் உள்ல ஆற்றலை அனைவரும் பெற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துக் கொண்டு வருவதாக ஸ்டாலின் ஒரேயடியாக போற்றி புகழ்ந்திருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

மக்கள் அலை
''பேசாமல் அப்படியே கொஞ்ச நேரம் நின்று கொண்டு உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் கடல் அலையை இங்கே நான் பார்க்கிறேன். கடல் இல்லாத இந்த கரூருக்கு, மக்கள் கடலையே உருவாக்கி இருக்கிறார் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி. அலை இல்லாத கரூருக்குள் மக்கள் அலையை உருவாக்கி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.''

டார்கெட் செந்தில்பாலாஜி
''இங்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்திற்குள்ளே நுழைந்ததில் இருந்தே நான் பார்க்கிறேன், பார்க்கும் இடமெல்லாம் மக்கள். எந்தப் பணியாக இருந்தாலும் அதற்கு ஒரு டார்கெட் நிர்ணயிப்பார். எந்தச் சூழலிலும் அந்த டார்கெட்டை முடித்துக் காட்டக் கூடியவர் என்று அவரை நான் ஏற்கனவே பலமுறை பாராட்டி இருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன். அவர் அமைச்சராக வருவதற்கு முன்பு, மின்சாரத்துறை எந்த நிலைமையில் இருந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.''

கோவை மாவட்டம்
''மின்னகம் சேவை மையம், ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு, 316 துணை மின் நிலையங்கள் என மாபெரும் சாதனைகளைச் செய்து அந்த துறையை மீட்டெடுத்து வருகிறார். அதே நேரத்தில், கரூர் மாவட்டத்தை மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்று அந்த மாவட்டத்தையும் சேர்த்துக் கவனித்து, எங்கும் எந்தத் தொய்வும் இல்லாமல் அவர் செயல்பட்டு வருகிறார்.''

மக்கள் கடல்
''இத்தகைய ஆற்றலை அனைவரும் பெற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துக் கொண்டு வருகிறார். தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வாழ்க்கை கருவான ஊர் இந்த கரூர் மாவட்டம். அமைச்சர் செந்தில்பாலாஜி என்னை மக்கள் கடல் அலையில் மிதக்க வைத்துள்ளார். நேற்று இரவிலிருந்து இந்த நிமிடம் வரையில். அதற்காக மீண்டும், மீண்டும் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ''
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications