கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’டார்கெட்டை’ எப்படியும் முடிச்சுருவார்! அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

கரூர் : இதற்கு முன் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் செய்யாத சாதனையை தமிழக அரசு செய்திருக்கிறது. இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்ல வைக்கக் காரணமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மனமார நான் பாராட்டுகிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தமிழக மின்சாரத்துறை சார்பில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக ஈரோட்டில் திருமண நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு கரூர் வந்த அவருக்கு அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சி மேடை மாநாடு போல பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்ததோடு கொடிகள் தோரணங்கள் என மாஸ் காட்டி இருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதனால் மகிழ்ந்து போன முதல்வர் ஸ்டாலின் மேடையிலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி வெகுவாக புகழ்ந்தார்

பாஜக தேர்தல் கூட்டணி? சட்டென வந்த பதில்.. “கோமாளி கட்சிய பத்தி கேட்காதீங்க” செந்தில் பாலாஜி காட்டம்! பாஜக தேர்தல் கூட்டணி? சட்டென வந்த பதில்.. “கோமாளி கட்சிய பத்தி கேட்காதீங்க” செந்தில் பாலாஜி காட்டம்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," தமிழ்நாடு அரசின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கும் நாளாக இது அமைந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு லட்சம் இணைப்புகளைக் கொடுத்திருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று ஐம்பதாயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இணைப்புகளை பதினைந்து மாத காலத்தில் வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால் இதனை விட மகத்தான சாதனை இருக்க முடியாது. இதற்கு முன் எந்த அரசும் இத்தகைய சாதனையைச் செய்தது இல்லை. நம்முடைய அரசு தான் செய்து காட்டி இருக்கிறது. இதற்கு முன் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் இத்தகைய சாதனையைச் செய்தது இல்லை.

டார்கெட்

டார்கெட்

நம்முடைய அரசு தான் செய்து காட்டி இருக்கிறது.இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்ல வைக்கக் காரணமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மனமார, நான் பாராட்டுகிறேன். அவரை முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பாராட்டும் போது டார்க்கெட் வைத்து செயல்படுபவர் என்று நான் குறிப்பிட்டேன். தனக்கு ஒரு டார்க்கெட் வைத்துக் கொள்வார்- அந்த டார்க்கெட்டை எப்படியும் முடித்துக் காட்டுவார் செந்தில்பாலாஜி என்று நான் சொன்னேன்.

மனமார்ந்த நன்றி

மனமார்ந்த நன்றி

நான் சொன்னது அன்று கூட சிலருக்கு புரியாமல் இருந்திருக்கலாம்.அவர்களுக்கும் இன்று புரிந்திருக்கும். ஒரு இலக்கை தனக்குத் தானே வைத்துக் கொண்டு - அந்த இலக்கை முடித்துக் காட்டுபவராக செந்தில்பாலாஜி தன்னை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அவருக்குத் துணை நிற்கும் மின் துறை அதிகாரிகளுக்கும் - அலுவலர்களுக்கும் - நாட்டின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் மட்டுமல்ல- தமிழக விவசாயிகளின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

English summary
The Tamil Nadu government has achieved a feat that no other state government in India has done before. Chief Minister Stalin has praised Minister Senthil Balaji from the bottom of my heart saying, "I wholeheartedly appreciate Minister Senthil Balaji for making me stand up and say this feat."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X