“பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நோ என்ட்ரி..” முப்பெரும் விழாவில்.. முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை
கரூர்: கரூர் மாவட்டம் கோடாங்கிபட்டியில் இன்று திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அனுமதியில்லை என்று கறாராக கூறியிருக்கிறார்.
முதலமைச்சர் பேசியதாவது, "ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் உறுதியுடன் எதிர்த்து நிற்கிறோம். கவர்னரை கொண்டு நம்மை முடக்க நினைக்கும்போது சட்ட ரீதியாக நாம் அதை எதிர்த்து நிற்கிறோம். தொகுதி மறுவரையறை என்று சொன்னால் அதை எதிர்த்து நிற்கிறோம். இப்படி எந்த விதத்தில் இடர்கள் வந்தாலும் அதற்காக நாங்கள் நிற்கிறோம். மாநிலங்கள்தான் நாட்டின் அடித்தளம் என்பதை விளக்க, மத்திய அரசு கிடையாது, ஒன்றிய அரசு என்று அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறோம்.

இப்படி போராடி, போராடி, தமிழ்நாட்டையும், தமிழர்களையும் தலை நிமிர்த்த வைத்திருக்கிறோம். இவ்வாறாக தலைநிமிர்த்திய தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். பேரறிஞர் அண்ணாவின் பற்றாளனே, தலைவர் கலைஞரின் உடன்பிறப்பே.. தனி நபர்கள் தோன்றுவார்கள் மறைவார்கள். கட்சிகள் வரும் போதும். ஆனால் தமிழ்நாட்டின் தனிப்பெருமை என்பது நிரந்தரமானதாகும். நம் மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த மண்தான் நமக்கு எல்லாம் கொடுத்தது. இதை காக்கும் கடமை நமக்குதான் இருக்கிறது.
நீட் தேர்வை ரத்த செய்ய மறுப்பு, கல்வி நிதி விடுவிக்க மறுப்பு, கீழடியின் தொன்மை மறைப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்று சொல்லி வாக்குரிமையை பறிப்பு என மத்திய அரசு ஏராளமான அடக்குமுறையை ஏவி வருகிறது. ஆனால் அந்நாளும் சரி, இன்னாளும் சரி, தமிழ்நாட்டில் அடக்குமுறைக்கு, ஆதிக்கத்திற்கு, திணிப்புக்கு, பாஜகவுக்கு நோ என்ட்ரி.
இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு. மூன்று முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்தும், தமிழகத்தில் மட்டும் உங்கள் அரசியல் எடுபடவில்லையே! இன்னுமா எங்களை பற்றி உங்களுக்கு தெரியவில்லை? இங்கிருக்கிறவர்களுக்கு மட்டும் கிடையாது, சோஷியல் மீடியாக்களில், டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிற உங்களுக்கு சொல்கிறேன். குறிப்பாக, இளைஞர்களுக்கு சொல்கிறேன். காலம் காலமாக நாம் போராடி பெற்ற உரிமைகள் பறிபோவதை அனுமதிக்கலாமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications