விசாரணை கமிட்டி.. விஜய் மீது ஆக்சனா? தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை! என்ன பேசினார்?
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். கரூரில் தமிழக வெற்றிக் கழக விஜய் கூட்டத்தில் மக்கள் பலியான சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு விரைய உள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட போஸ்டில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
விஜய் மீது ஆக்சன்
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். கரூரில் தமிழக வெற்றிக் கழக விஜய் கூட்டத்தில் மக்கள் பலியான சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

பல்வேறு முக்கிய விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்படலாம் என்கிறார்கள். அதன்படி, உடனடியாக பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் தருவது. காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை தருவது, கூட்டத்தில் நடந்தது தொடர்பாக விசாரணை கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக விசாரணை கமிட்டி வழியாக விஜய் மீது ஆக்சன் எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
இது தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன், என்று கூறி உள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டோருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன், என்று கூறி உள்ளார்.
உயரும் பலி எண்ணிக்கை
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 50 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 40 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 10 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.
பலர் ஆம்புலன்சில் கொண்டு வரப்படுவதால் கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூர் விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications