"விக்னேஷ்வரி" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை!
ராகிங் கொடுமையால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
கரூர்: விக்னேஷ் என்ற மாணவனை விக்னேஸ்வரி என்று சொல்லி ராகிங் செய்துள்ளனர் சீனியர்கள். இதனால் மனசு உடைஞ்சு போன விக்னேஸ்வரன் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார்!
கரூர் தாந்தோன்றி மலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் லீவு முடிந்து இப்போதுதான் வகுப்புகள் தொடங்கியது.

முதலாமாண்டு வகுப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இதில் கரூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், செல்வகுமார் இருவரும் சேர்ந்துள்ளனர்.
புதுசாக காலேஜ்-க்கு வந்ததால், அவர்களை 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிவசக்தி, நந்தகுமார் ராகிங் செய்துள்ளனர். குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி ரேகிங் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விக்னேஷை, விக்னேஷ்வரி, விக்னேஷ்வரி என்று அனைவர் முன்னாடியும் கிண்டல் கேலி செய்துள்ளனர். இதனால் அவமானமும், மனவேதனையும் அடைந்த விக்னேஷ், எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். மயங்கி விழுந்து கிடந்த அவரை, அருகில் இருந்தோர், கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் விக்னேஷ் உள்ளார்.
இது குறித்து செல்வகுமார் தாந்தோன்றிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சிவசக்தி, நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ராகிங் கொடுமையால் மாணவர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications