கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. இந்தியாவிற்கே வழி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை.. 102 பேர் டிஸ்சார்ஜ்.. சாதித்தது எப்படி?

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகமான நபர்களை டிஸ்சார்ஜ் செய்து கரூர் அரசு மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.

Google Oneindia Tamil News

கரூர்: கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகமான நபர்களை டிஸ்சார்ஜ் செய்து கரூர் அரசு மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.

Recommended Video

    தாங்க முடியல | சென்னை மக்களின் கொரோனா குமுறல் | Oneindia Tamil

    தமிழகத்தில் மூலம் 1,596 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்துள்ளனர்.

    மொத்தமாக 635 பேர் தமிழகத்தில் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 943 பேர் மட்டுமே தமிழகத்தில் ஆக்ட்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள்.

    கொரோனா.. தேனியில் களமிறங்கிய பல்வேறு அமைப்புகள்.. மக்களுக்கு தொடர் உதவி! கொரோனா.. தேனியில் களமிறங்கிய பல்வேறு அமைப்புகள்.. மக்களுக்கு தொடர் உதவி!

    பெரிய சாதனை

    பெரிய சாதனை

    இதில் தமிழகத்தில் கரூரில்தான் அதிகமான நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கரூரில் மொத்தம் 102 பேர் கரூரில் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இரண்டே வாரத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இந்த சாதனையை செய்துள்ளது. கரூரில் இப்படி சிகிச்சை அளித்த குணமான பலர் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கலக்கம் அடையவில்லை

    கலக்கம் அடையவில்லை

    டெல்லி மாநாடு காரணமாக தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் வேகமாக கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. அப்போது கரூரில்தான் பலர் கொரோனா காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு இருந்த மருத்துவர்கள் நோயாளிகளின் எண்ணிக்கையை பார்த்து கலக்கம் அடையவில்லை. மிக சரியான திட்டமிட்டு எல்லோருக்கும் சிகிச்சை அளித்தனர்.

    புதிய பணியாளர்கள்

    புதிய பணியாளர்கள்

    ஒப்பந்த அடிப்படையில் புதிய பணியாளர்களை நியமித்து பணிகளை பிரித்துக் கொடுத்தனர். மருத்துவர்களுக்கு சரியாக ஓய்வும் கொடுத்து முறையாக பணிகளை மேற்கொள்ள வைத்தனர். தமிழகத்தில் கரூரில் 41 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஆனால் அண்டை மாவட்டங்களான சேலம், திருப்பூர், நாமக்கல், திருச்சியில் இருந்து பலர் இங்கே வந்து சிகிச்சை பெற்றனர்.

    எத்தனை பேருக்கு சிகிச்சை

    எத்தனை பேருக்கு சிகிச்சை

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில்தான் 102 பேர் குணமடைந்து உள்ளனர். சென்ற வாரம் தொடக்கத்தில் 32 பேர் குணமடைந்தனர். அதன்பின் 22 பேர் குணமடைந்தார். அதன்பின் 48 பேர் இந்த வாரம் குணமடைந்தனர். இதன் மூலம் இதுவரை 102 பேர் அங்கு குணமடைந்து உள்ளனர். இதில் திருப்பூர், நாமக்கல் மற்றும் திருச்சியை சேர்ந்த பலர் கணிசமாக உள்ளனர்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    அறிகுறி வந்ததும் தனிமைப்படுத்தியது, உடனே சோதனை செய்தது, நோய் ஏற்பட்டால் உடனே மிக துரிதமான சிகிச்சை, சரியான கண்காணிப்பு இதுதான் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வெற்றிக்கு காரணம் ஆகும். அந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் சரியான திட்டமிடலும், ஆதரவும்தான் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பெரிய அளவில் ஊக்குவித்து இருக்கிறது.

    உடனே செய்தனர்

    உடனே செய்தனர்

    இன்னொரு பக்கம் அங்கு இருக்கும் வயதான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு அளித்து தேவையான வெண்டிலெட்டர்களை ஏற்பாடு செய்து அனைத்தையும் தயார் நிலையில் வைத்து இருந்தனர். தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்குவதும், அனைத்தையும் சரியாக தயார் செய்து முன்னெச்சரிக்கையோடு இருந்தது.
    கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் தமிழகம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகம் இதில் முதல் இடம் பிடிக்க கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக முக்கியமான காரணம்.

    செம மருத்துவமனை

    செம மருத்துவமனை

    இங்கு குணமாகும் நோயாளிகளை ஆட்சியர் அன்பழகன் நேரில் வந்து வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார். இவர்களுக்கு கைதட்டி உற்சாகமாக வழியனுப்பி வைக்கிறார்கள். அரசு மருத்துவமனை என்றால் எல்லோரும் பயப்படும் நிலையில் இங்கிருக்கும் மருத்துவர்கள் மொத்தமாக இலவசமாக கொரோனா சிகிச்சை அளித்து, அதில் எல்லோரையும் குணப்படுத்தியும் உள்ளது பாராட்டுதலுக்குரியது.

    English summary
    Coronavirus: Karur Government Medical college hospital becomes a role model in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X