கரூரில் விஜய் என்னை பற்றி பேச தொடங்கியதும் செருப்பு வீசினார்களா.. ஆதாரத்துடன் சொன்ன செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

கரூர்: என்னை பற்றி பேசும் போது செருப்பு வீசப்படவில்லை, லைவாக சென்ற வீடியோவில் பார்க்கும்போதே தெரியும்.. அவர் என்னை பற்றி 16வது நிமிடத்தில் தான் பேசுகிறார். ஆனால் அதற்கு முன்பே செருப்பு வீசப்பட்டது. விஜய் பேசிய 6வது நிமிடத்திலேயே செருப்பு வீசப்பட்டது. தண்ணீர் வேண்டும் என்பதை கேட்பதற்காக விஜய்யின் கவனத்தை ஈர்க்க அவர்கள் செருப்பை வீசியிருக்கலாம் என செந்தில் பாலாஜி பேசினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் தமிழக அரசு மீது குற்றம்சாட்டும் வகையில் விஜய் பேசியிருந்தார்.

did-they-throw-a-shoe-when-vijay-spoke-about-me-senthil-balaji-responds-with-proof

கூட்டம் அதிகம் இல்லை

இந்த நிலையில் இன்று கரூரில் செய்தியாளர்களை செந்தில் பாலாஜி சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:- ஒலிபெருக்கிகள் கூட சரியாக அமைக்கவில்லை. கூட்டம் அதிகமாக வந்தது என்று சொல்கிறார்கள். அதிமுக கூட்டத்தை விட கூடதலாக 2 ஆயிரம் பேர் வந்தார்கள். அது ஒரு கூட்டமா..

கூட்டம் என்பது எல்லாம் இல்லை.. கட்டுப்பாடற்ற கூட்டம்.. மற்ற கட்சிகளில் எல்லாம் கூட்டம் கூடும். ஆனால் கட்டுப்பாடுடைய கூட்டம்.. இது கட்டுப்பாடற்ற கூட்டம்.. செருப்பு வீசப்பட்டதாகவும், அதற்கு நான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.. என்னை பற்றி பேசும்போது தான் செருப்பு வீசப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

விஜய் மீது செருப்பு வீசப்பட்டதா

ஆனால் விஜய் அந்த கூட்டத்தில் மொத்தம் 19 நிமிடம் மேடையில் நின்று பேசினார். ஆனால் அவர் என்னை பற்றி பேசியது 16 வது நிமிடத்தில் தான்.. ஆனால் விஜய் பேசிய 6வது நிமிடத்திலேயே முதலில் செருப்பு வீசப்பட்டது. 2வது செருப்பு அடுத்த சில நிமிடங்களில் வீசப்பட்டது. என்னை பற்றி பேசும் போது செருப்பு வீசப்படவில்லை.

செருப்பு எப்போது வீசப்பட்டது? என்னை பற்றி விஜய் எப்போது பேசினார்? சம்பவம் எப்போது நடந்தது? என்பது எல்லாம் தெரியாமல் என்னை பலரும் விமர்சித்து வருகிறார்கள். விஜய் என்னை பற்றி முதலில் பேசவே இல்லை. ஆனால் 5 வது நிமிடத்திலேயே எல்லாம் நடக்கிறது. என்னை பற்றி 16 வது நிமிடத்தில் தான் பேசுகிறார். 19வது நிமிடத்தில் விஜய் பேச்சை முடிக்கிறார்.

தண்ணீர் வேண்டும் என்பதற்காக

விஜய்யிடம் தண்ணீர் கேட்டபோது கூட அவர் பேச்சை தொடர்ந்து பேசினார். கூட்டத்தில் தண்ணீர் பாட்டில்கள் கூட ஏற்பாடு செய்யவில்லை. குறித்த நேரத்தில் வந்திருந்தால் இந்த பிரச்சினையே ஏற்பட்டு இருக்காது. விஜய் வந்தது லேட்.. அங்கே நீண்ட நேரமாக தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துள்ளனர். விஜய் பேசியபோது கூட கூட்டத்திற்கு தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்தார். அப்போது தண்ணீர் வேண்டும் என்பதை கேட்பதற்காக கவனத்தை ஈர்ப்பதற்காக செருப்பு வீசப்பட்டு இருக்கலாம்.

செருப்பு வீசப்பட்டதற்கு நான் காரணமா

ஆனால் செருப்பு வீசப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று என்னை விமர்சிக்கிறார்கள். நான் யார் என்று மக்களுக்கு தெரியும். என் தொகுதி மக்கள் தான் எனக்கு முக்கியம். நான் கரூரில் தான் இருந்தேன். அதனால் தான் என்னால் வேகமாக மருத்துவமனைக்கு வர முடிந்தது. நான் வேண்டும் என்றால் பிளைட் புக் செய்து சென்னைக்கு போய்விடட்டுமா?..

விஜய் வரும்போதே கூட்டம் அதிகமாகிவிட்டது. அவர் 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்த அளவுக்கு வந்திருக்காது. விஜய் வாகனத்தினை இதற்கு மேல் அனுப்ப வேண்டாம் என்று போலீசார் கூறியதாக சொல்கிறார்கள். அதற்கு பிறகும் அவர்கள் உள்ளே சென்று இருக்கிறார்கள். நான் இந்த சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்பவில்லை. இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+