கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சி தொகுதி பள்ளபட்டி வாக்குசாவடியில் திமுக-பாஜகவினரிடையே மோதல்.. பதற்றம்

Google Oneindia Tamil News

கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளபட்டி வாக்குசாவடியில் தன்னார்வலர்கள் முறைகேடான செயலில் ஈடுபடுவதாக கூறி பாஜகவினர் வாக்குவாததில் ஈடுபட்டனர் இதனிடையே திமுகவிற்கும் வாக்கு அளிக்க வரும் இஸ்லாமியர்களை தடுப்பதற்காக பாஜகவினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்தவாக திமுகவினரும் குற்றம் சாட்டினர், இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பள்ளபட்டியில் உள்ள 30,000 இஸ்லாமியர் வாக்குளை வெற்றி தோல்வி தீர்மானிக்கும். இந்நிலையில் இன்று வாக்கு பதிவு தொடங்கிய காலை 7 மணியிலிருந்த பள்ளப்பட்டியில் உள்ள 4 வாக்குசாவடிகள் பரபரப்பாக கானப்பட்டது.

DMK-BJP clash at Pallapatti polling booth in Aravakurichi constituency

கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி உள்ளிட்ட பாஜகவினர் பள்ளபட்டியில் உள்ள வாக்குசாவடியில் ஆய்வு நடத்தினர் அப்போது கொரோனா தடுப்பு பணியில் இருந்த தன்னவர்லர்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படட் தாக குற்றம் சாட்டினர். இதனால் பாஜகவினர்க்கும் திமுகவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

DMK-BJP clash at Pallapatti polling booth in Aravakurichi constituency

அப்போது திமுகவினருக்கு இஸ்லாமியர் வாக்கு அளிப்பதை குறைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினர் வேண்டும் என்றே பிரச்சினை கிளம்புகின்றனர் என கூறி இரு தரப்பினர் வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருவருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் தவசெல்வன் மாவட்ட காவல்காணிப்பாளர் ஷஷாங்க் சாய் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து இரு தரப்பினரை அமைதி படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

English summary
karur: DMK-BJP clash at Pallapatti polling booth in Aravakurichi constituency over muslim votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X