கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியின் 30,000 ஆதரவாளர்கள்.. கரூர் விழாவில் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்தது திமுகவிற்கு பெரிய வலு சேர்க்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கரூரில் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

கரூர்: செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்தது திமுகவிற்கு பெரிய வலு சேர்க்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கரூரில் பேசியுள்ளார்.

கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழா நடக்கிறது. இந்த விழாவில் பிற கட்சிகளை சேர்ந்த 10,000க்கும் அதிகமான பேர் திமுகவில் இணைந்தார்கள். செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைந்தார்கள்.

முன்னாள் அதிமுக, அமமுக கட்சியினரும் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். திமுகவை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

இதில் பேசிய ஸ்டாலின், நம்மை வெல்ல யாரும் இல்லை; பிறக்க போவதும் இல்லை. இந்த மக்கள் கூட்டத்தை பார்த்தாலே நமக்கு தோல்வியே கிடையாது என்பதை தெரிகிறது. கரூரில் மக்கள் வெள்ளம் தற்போது திறந்துள்ளது.

மக்களில் ஒருவன்

மக்களில் ஒருவன்

எந்த பொறுப்பில் இருந்தாலும் மக்களில் ஒருவனாக நான் இருப்பேன். அதனால்தான் நான் இப்போது மக்களை சந்திக்க வந்தேன். புதிய இயக்கத்தில் சேர இங்கிருப்பவர்கள் வரவில்லை. அவர்கள் யாரும் புதிய கட்சிக்கு வரவில்லை.

திமுக இயக்கம்

திமுக இயக்கம்

அவர்களுக்கு சொந்தமான இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இது அவர்களின் தாய் இயக்கம். பெற்றோர் நம்பிக்கையை காத்த பிள்ளையாக திமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் திமுகவில் இணைந்து பெரிய மகிழ்ச்சி. குழந்தைகள் மீது வைக்கும் நம்பிக்கை போல அவர்களை நம்புகிறேன்.

புதிய பலம்

புதிய பலம்

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு இவர்கள் வலு சேர்ப்பார்கள். செந்தில் பாலாஜிக்கு மட்டுமில்லாமல் இவர்கள் திமுகவிற்கு பெரிய பலமாக இருப்பார்கள், என்று கூறியுள்ளார்.

English summary
DMK gets new strength because of Senthil Balaji says M K Stalin Karur function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X