இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் மொத்த செலவையும் ஏற்ற செந்தில்பாலாஜி.. கரூரில்..!
எரியூட்டும் சடலங்களுக்கான கட்டணங்களை செந்தில்பாலாஜி ஏற்றுள்ளார்
கரூர்: கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட, ஒரு வாரமாகவே கரூரில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லையாம்.. இதற்கு காரணம், அமைச்சர் செந்தில்பாலாஜிதான்.. எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கான கட்டண செலவை தானே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளாராம்.
கரூர் மாவட்டத்திலும் நோய் தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்..
குறைந்தது 200-க்கு பேருக்கு மிகாமல் தொற்று பாதித்து வருகிறது.. இதில் பலர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றாலும், பலரும் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

அஸ்தி
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள், கரூர் பாலம்மாள்புரத்தில் உள்ள மின் மயானத்தில்தான் எரியூட்டப்படும்.. இறந்தவர்களின் உடலை அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்து எரியூட்டி, அஸ்தியை அளிப்பது வரையில் மொத்த செலவுகளுக்கும் சேர்த்து ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

கட்டணம்
ஆனால், சில நாட்களுக்கு முன்பு இந்த எரியூட்டும் மையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பலருக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது.. அதனால், இந்த மையம் கரூர் நகராட்சி நகர்நல அலுவலர் மேற்பார்வையில் இயங்கி வருகிறது... இந்த எரியூட்டு மையத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா உட்பட எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

செந்தில்பாலாஜி
காரணம், எரியூட்டுவதற்கான முழு செலவையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்றிருக்கிறார். இதை பற்றி அமைச்சர் சொல்லும்போது, கரூர் மின் மயானத்தில் அடக்கம் செய்ய, எரியூட்ட கட்டணம் கேட்பதாக இது வரை எந்த புகாரும் வரவில்லை... நகராட்சி பணியாளர்கள் மூலமாக காலை முதல் இரவு வரை புக்கிங் செய்யப்பட்ட அனைத்து உடல்களையும் தகனம் செய்து அஸ்தியை அவர்களிடத்தில் பணியாளர்கள் அளித்து வருகின்றனர்.

இலவசம்
இப்போது கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்ய சொல்லி உள்ளோம்.. அந்த செலவுத் தொகை முழுவதையும் நான் அளிக்க உள்ளேன்" என்கிறார். அந்த வகையில், கொரோனாவில் மட்டுமல்லாமல், எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.












Click it and Unblock the Notifications