மச்சினிச்சி வர்ற நேரம்.. போச்சு போச்சு சங்கீதாவை காணோம்.. கரூர் "மாமா"வும் மிஸ்ஸிங்.. பரிதாப மனைவி
கரூர்: தூத்துக்குடி கொலை சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த சம்பவம் கரூரில் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடத்தை சேர்ந்தவர் நம்பிராஜா.. இவரது மனைவி பெயர் செல்வதேவி.. ஆனால் நம்பிராஜா, திசையன்விளையில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வாராம். அப்போதுதான், தன்னுடைய மச்சினிச்சி நீலவேணியிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது... நீலவேணி பல் மருத்துவர் ஆவார்.

மருமகன்: மருமகன், தங்கள் மகளிடம் நெருங்கி பழகுவதை கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.. இதனால் நீலவேணியை கண்டித்திருக்கிறார்கள்.. எனினும், இருவரும் எதைப்பற்றியும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் 7 மாதங்களுக்கு முன்பு, நம்பிராஜாவும், நீலவேணியும் திடீரென மாயமாகிவிட்டார்கள்.. இதனால் பதறிப்போன நீலவேணி குடும்பத்தினர் வள்ளியூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, நீலவேணியை நம்பி ராஜா கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
நீலவேணி: ஒரு வாரத்துக்கு முன்பு, மனைவி செல்வதேவிக்கு போன் செய்து பேசிய நம்பிராஜா, நீலவேணிக்கு உடம்பு சரியில்லை, ஆசாரிப்பள்ளம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.. இதனால், நீலவேணியும், அவரது பெற்றோரும் பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கு இருவருமே இல்லை.
எனவே மருத்துவமனை ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரித்தற்கு, நீலவேணி இறந்து விட்டதாகவும், சடலத்தை அவரது கணவர் என்று சொல்லிக்கொண்டு நம்பிராஜா வாங்கிச் சென்று மின்மயானத்தில் எரித்து விட்டதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீலவேணியின் தந்தை, நாகர்கோவில் மாவட்ட எஸ்.பியை சந்தித்து நம்பிராஜா மீது புகார் அளித்துள்ளார். ஆனால், அதற்குள் நம்பிராஜா தலைமறைவாகிவிட்டாராம்..
நீலவேணி எப்படி இறந்தார்? அவருக்கு என்ன ஆனது? என்றெல்லாம் தெரியவில்லை.. மச்சினிச்சியை கடத்தி சென்ற நம்பிராஜா பிடிபட்டால்தான் உண்மை தெரியவரும்.
சசிகலா: இதுபோலவே, கரூரிலும் ஒரு மச்சினிச்சி விவகாரம் வெடித்துள்ளது.. கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோரணக்கல்பட்டி அருகே உள்ளது பாரதி நகர்.. இங்கு வசித்து வரும் சசிகலா என்பவருக்கு 33 வயதாகிறது.. இவரது கணவர் அருண் பிரகாஷ் வயது 35.
இவர்கள் இருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.. இந்நிலையில் சசிகலாவின் தங்கை சங்கீதா, அடிக்கடி தன்னுடைய அக்கா சசிகலா வீட்டுக்கு வருவாராம்.. சங்கீதாவுக்கு 29 வயதாகிறது..
நெருக்கம்: நாளடைவில் அருண்பிரகாஷுக்கும் சங்கீதாவுக்கும் நெருக்கம் அதிகமாகி தகாத உறவு இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது... இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி காலை 11 மணியளவில், அருண்பிரகாஷ், சங்கீதா இருவரும் வெளியே சென்றார்களாம்.. ஆனால், இருவருமே வீடு திரும்பவில்லை.
அருண்பிரகாஷ் வழக்கம்போல் செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதேபோல சங்கீதா குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவிலலை.
தொடர் விசாரணை: இதனால், தன்னுடைய கணவனையும், தங்கையையும் காணவில்லை என சசிகலா போலீசில் புகார் தந்துள்ளார்.. புகாரை பெற்றுக்கொண்ட தான்தோன்றிமலை காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மாயமான 2 பேரையும் தேடி வருகிறார்களாம்..!!
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications