மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகருக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.சேகரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கரூரில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்ததோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதே வழக்கில் கடந்த 2 ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி எம்.ஆர்.சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ஆர். சேகர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்த சேகரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் எம்.ஆர்.சேகர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சேகரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், சேகரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு கரூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications