தப்பினார் எம்ஆர் விஜயபாஸ்கர்.. மணல் பதுக்கல் வழக்கில் சரணடைய ஏப்ரல் 28 வரை காலஅவகாசம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டசபை தொகுதியின் வேட்பாளருமான எம்ஆர் விஜயபாஸ்கர் சரணடைய ஏப்ரல் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியையொட்டி வந்துள்ள இந்த உத்தரவால் எம்ஆர் விஜயபாஸ்கர் ஹேப்பியாகி உள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர். இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம், விஜயபாஸ்கர் தோல்வியடைந்தார். இப்போது மீண்டும் கரூர் சட்டசபை தொகுதியில் எம்ஆர் விஜயபாஸ்கர் போட்டியிட்டுள்ளார்.

high-court-gives-time-to-ex-aiadmk-minister-mr-vijayabaskar-until-april-28-to-surrender-in-the-sand

இதற்கிடையே தான் எம்ஆர் விஜயபாஸ்கர் புதிதாக வீடு கட்டுவதற்காக அரசு அனுமதியின்றி பெருமளவில் ஆற்று மணலை குவித்து வைத்திருந்ததாக புகார் எழுந்தது. ரெய்டு போன அதிகாரிகள் 35 யூனிட் மணலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்ஜாமீனில் விஜயபாஸ்கர்

தேர்தல் நெருங்கிய நிலையில் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் வழக்கில் முன்ஜாமீன் கோரினார். அதனை விசாரித்த கரூர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. அதுமட்டுமின்றி மார்ச் 31ம் தேதி சரணடைய உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதற்குள் தேர்தல் தேதி வந்துவிட்டது.

ஏப்ரல் 28 வரை காலஅவகாசம்

இதனால் நீதிமன்றத்தில் சரணடைவதற்கான அவகாசத்தை நீட்டிக்கும்படி எம்ஆர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் ஏப்ரல் 28ம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம் அளித்தது. மேலும், ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆம் தேதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

விஜயபாஸ்கருக்கு நிம்மதி ஏன்?

தற்போது எம்ஆர் விஜயபாஸ்கர் கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 21ம் தேதி வரை பிரசாரம் உள்ளது. அதன்பிறகு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆனால் உயர்நீதிமன்றமோ ஏப்ரல் 28 ம் தேதி வரை கோர்ட்டில் சரணடைய அவகாசம் வழங்கி உள்ளது. இதனால் அவர் நிம்மதியாக தேர்தல் பணிகளை முடித்து வாக்களித்துவிட்டு கோர்ட்டில் ஆஜராகலாம்.

அதேபோல், ஏப்ரல் 28 ல் நீதிமன்றம், ஏப்ரல் 29, 30, மே 1ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 4ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியாகும். அன்றைய தினம் நீதிமன்றத்தின் உத்தரவில் இல்லை. இதனால் எம்ஆர் விஜயபாஸ்கர் தேர்தல் ரிசல்ட் தேதியிலும் வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கலாம். அதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+