எந்த தவறையும் செய்யவில்லை.. என்னை ஏன் தவறாக நினைக்கிறீர்கள்?.. தற்கொலை கடிதத்தில் கரூர் ஆசிரியர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை எல்லாரும் தவறாக நினைக்கிறார்கள் என கரூர் பள்ளி ஆசிரியர் சரவணன் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Karur School Girl வழக்கில் திடீர் திருப்பம் | Oneindia Tamil

    கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சரவணன்(44). இவருடைய மனைவி ஜெயந்தி (42). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    கரூரில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி பயின்ற தனியார் பள்ளியில் சரவணன் கணித பாட ஆசிரியராக பணியாற்றினார். இவர் பள்ளியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு நேற்று (நவ. 24) மாலை துறையூர் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் நடராஜன் வீட்டுக்கு தனியாக வந்துள்ளார்.

    தூக்கிட்டு தற்கொலை

    தூக்கிட்டு தற்கொலை

    அங்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான தகவலின் பேரில் துறையூர் போலீஸார் நேரில் சென்று சரவணனின் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.

    முசிறி

    முசிறி

    மேலும் இது தொடர்பாக துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தகவலறிந்து முசிறி டிஎஸ்பி அருள்மணி நேரில் சென்று விசாரித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 19 கரூரில் தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக யார் பெயரையும் குறிப்பிடாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவி தற்கொலை

    மாணவி தற்கொலை

    இதுகுறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கும், சரவணன் தற்கொலைக்கும் நேரில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் சரவணன் டைரியில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

    ஏன் இப்படி கூறுகிறார்கள்

    ஏன் இப்படி கூறுகிறார்கள்

    அந்த கடிதத்தில் ஜெயந்தி (மனைவி) என்னை மன்னித்துவிடு. அனைவரும் என்னை தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசைப்படவில்லை. இன்று காலை (நேற்று) வந்தவுடன் மாணவர் ஒருவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறையும் செய்யவில்லை. என்னை எல்லோரும் தவறாக நினைக்கிறார்கள். ஏன் இப்படி கூறுகிறார்கள் என தெரியவில்லை. நான் கோபத்தில் மாணவர்களை திட்டியுள்ளேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என சரவணன் எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில் அம்மா உங்களை விட்டு போகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவியின் தாய் வேதியியல் ஆசிரியர்தான் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பார் என கூறிய நிலையில் தற்போது கணித ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+