கரூரில் களமிறங்குகிறாரா அண்ணாமலை! பரபரக்கும் பாஜக! தொகுதியை அலசி ஆராய தயாராகும் குழு!
கரூர்: 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக
தலைவர் அண்ணாமலை களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜியை எதிர்கொள்ள அண்ணாமலை தான் சரியாக இருப்பார்
என்பது கூட்டணிக் கட்சியான அதிமுகவின் மாஜி அமைச்சர் ஒருவரின் கணக்காம்.
இதனிடையே அண்ணாமலையை பொறுத்தவரை கோவை, கரூர் என இரண்டு தொகுதிகளிலும் கவனம்
செலுத்துவதோடு, தேர்தல் நேரத்தில் டெல்லி மேலிடம் அளிக்கும் அறிவுரைக்கு
ஏற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறாராம்.

பொதுத்தேர்தல்
நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் இரண்டு ஆண்டுகள் என்பது இரண்டு மாதங்கள் போல் கடகடவென ஓடிவிடும். இதனால் இப்போதே தேர்தல் பணிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில்
கரூர், கோவை ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக வாக்குவங்கி
கரூர், கோவை என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளும் அதிமுகவுக்கு வாக்கு வங்கி பலமாக உள்ள தொகுதிகளாகும். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும் விராலிமலை,
மணப்பாறை, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவின் வாக்கு வங்கி இன்னும் அப்படியே உள்ளன. அரவக்குறிச்சி, கரூர்
ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுக வாக்கு வங்கி வலிமையாக உள்ளது.

கோவை தொகுதி
இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவின் வாக்கு வங்கியை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தளவு அங்கு பலமாக அதிமுக திகழ்கிறது. இதனால் இந்த இரண்டில் ஒன்றில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்பது அண்ணாமலையின் கணக்கு. இதை மையமாக வைத்து தொகுதியை அலசி ஆராய தனிடீம் ஒன்று தயாராகி வருகிறதாம்.

செந்தில்பாலாஜி
கரூர், கோவை என இரண்டு மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்செந்தில்பாலாஜி. இதனால் அண்ணாமலை இந்த இரண்டு தொகுதிகளில் எதில்
போட்டியிட்டாலும் அமைச்சர் செந்தில்பாலாஜியை எதிர்த்து தான் அவர் களமாடவேண்டிய சூழல் உருவாகும்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே!












Click it and Unblock the Notifications