விஜய் கரூர் கூட்டத்தில்.. ஜெனரேட்டரை ஆஃப் செய்ததே தவெக நிர்வாகிதான்.. வெளியான திடுக்கிடும் தகவல்
கரூர்: கரூரில் 41 பேரை பழிவாங்கிய தவெக விஜய் கூட்டத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இந்த புகாரில் உண்மை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து இப்போது ஜெனெரேட்டரை ஆளும் அரசு நிறுத்திவிட்டதாக திமுகவினர் புகார் வைத்தனர். ஆனால் அதை செய்ததும் தவெக கட்சியினர்தான் என்பது உறுதியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடத்திய தவெக கரூர் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் விசாரணையை தொடங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.

அதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக அருணா ஜெகதீசன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார்.
தமிழக அரசு மீது தவெகவினர் குற்றச்சாட்டு
இப்படி விசாரணைக்கு இடையே, 41 பேரை பழிவாங்கிய தவெக விஜய் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு மீது தவெகவினர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். தமிழக அரசின் சில செயல்கள் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன.
முதலில் அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இந்த புகாரில் உண்மை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, தள்ளுமுள்ளுவிற்கு திடீரென அங்கு ஏற்பட்ட மின் தடையே காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மின்வாரியம், விஜய் அங்குப் பேசும்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
விஜய் பேசும்போது மின்சாரம் முழுமையாக இருந்தது என்றும் அருகே இருந்த கடைகளில் விளக்குகள் எரிந்து கொண்டு இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது என்றும் எனவே மின்தடை என்பது பொய்யான தகவல் எனத் தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
ஜெனரேட்டர் நிறுத்திவிட்டனர்
இப்போது ஜெனெரேட்டரை ஆளும் அரசு நிறுத்திவிட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் புதிய புகார் வைத்தனர். ஆனால் அதை செய்ததும் தவெக கட்சியினர்தான் என்பது உறுதியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழக கூட்டத்தின் போது மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனாள் மக்கள் இருக்க இடம் இல்லாமல் மரங்களில் ஏற தொடங்கினர். 100 அடி சாலையில் 60 அடி நீள பேருந்து நுழைந்த போது நெருக்கடி இன்னும் அதிகரித்தது.
இதனால் விஜய் ரசிகர்கள் பலர் அங்கே இருந்த ஜெனரேட்டர்கள் அறைக்குள் சென்றனர். சாலையோரம் இருந்த ஜெனரேட்டர்கள் அறைக்குள் சென்றனர். அங்கே டீசல் கேன்கள் இருந்தன. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் என்று , விஜயின் பயணத்தை ஏற்பாடு செய்த தவெக குழுவை சேர்ந்தவர், ஜெனரேட்டரை ஆஃப் செய்தார். அவர்தான் பாதுகாப்பு கருதி ஜெனெரேட்டரை நிறுத்தினார்.
ஜெனெரேட்டரை திமுகவினர் நிறுத்தினார்கள்.. மின்சாரத்தை திமுகவினர் நிறுத்தினார்கள் என்றெல்லாம் ஆளும் தரப்பு மீது தவெக புகார் வைத்தது. அந்த புகாரில் துளியும் உண்மை இல்லை என்பதை தற்போது வெளியாகி உள்ள ஆதாரங்கள் நிரூபித்து உள்ளன.












Click it and Unblock the Notifications