சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்
Recommended Video
அரவக்குறிச்சி: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சிக்கு வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அந்த தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை.

கொலை
காந்தியாரின் சிலைக்கு முன்பு எப்பவோ கூறிவிட்டேன். நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.

நல்ல இந்தியர்களின் ஆசை
இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் உள்ள நிறங்கள் அப்படியே உள்ள இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை.

தீவிரவாதம்
நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு.

உண்மையான முஸ்லிம்கள்
தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். தாய் தமிழ்நாடு நோய்வாய்பட்டு இருக்கிறது. அதை நீங்கள்தான் மீட்க வேண்டும். ஆரத்தி தட்டில் காசு போடுவதை விட்டுவிட்டு அவர்களது மேம்பாட்டுக்கு ஏதாவது செய்யுங்கள் என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications