இப்படியா விப்பீங்க?...தட்டிக்கேட்ட மூத்த ‘குடி’ மகனுக்கு அடி உதை...டாஸ்மாக் அட்டூழியம்
கரூர் : கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை கேட்பதை தட்டிக்கேட்ட முதியவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்கள் டாஸ்மாக் கடை ஊழியர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Recommended Video
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மதுபானங்கள் விற்பனை செய்கிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் அதிகம் வசூலிப்பது அப்பட்டமாக நடக்கிறது.
மதுபானங்கள் கிடைத்தால் போதும் என்று கூடுதல் பணத்தை பற்றி கவலைப்படாமல் மதுபானங்களை வாங்குகிறார்கள் மதுபிரியர்கள். இதனிடையே சில இடங்களில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்வதை மதுப்பிரியர்கள் தட்டிக்கேட்காமலும் இல்லை.

டாஸ்மாக் பணியாளர்
அப்படி தட்டி கேட்டால் தகராறு ஏற்பட்டு சண்டைகளும் ஏற்படுகிறது. மதுபானக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யும் பிரச்சனை முதியவர் ஒருவர் தட்டிக் கேட்டுள்ளார். அவரை அடித்து உதைத்துள்ளார் அங்கிருந்த டாஸ்மக் பணியாளர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என்ன நடந்தது
சம்பவம் எங்கு நடந்தது. இந்த சம்பவம் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டம் கா.பரமத்தி ஒன்றியத்தில் நடந்துள்ளது. அங்குள்ள தென்னிலை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்களிடம் குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களுக்கு ஒரிஜினல் விலையைவிட ரூ.10 அதிகம் வாங்கிக்கொண்டு கொடுப்பதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சம்பவம்
அதைத்தட்டிக்கேட்ட வாடிக்கையாளர் ஒருவரை ஒயின்ஷாப் சூப்பர்வைசர் தடியைக் கொண்டு தாக்கியிருக்கிறார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பது நடப்பதாக புகார் உள்ளது.

குடிமகன்கள் கோரிக்கை
இந்த விவகாரத்தில் அரசு உறுதியான உத்தரவு பிறப்பித்து கூடுதல் பணம் வசூலிப்பதை அரசு தடை செய்ய வேண்டும் மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மற்ற மாநிலங்களில் கிடைக்கும் எந்த பிராண்ட் மதுவும் டாஸ்மாக் கடைகளில் கிடைப்பது இல்லை என்றும், குறிப்பிட்ட சில மதுவகைகள் மட்டுமே கிடைப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications