தொடரும் ஐடி சோதனை.. திமுக அதிகாரத்தில் உள்ள கரூர் மாநகராட்சி கூட்டத்துக்கு சிக்கல்! என்னாச்சு?
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில் மாநகராட்சி கூட்டத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் திட்டங்கள் பற்றி விவாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த மாதம் 26ம் தேதி சென்னை, கரூர், கோவை மாவட்டங்களில் 40 இடங்களில் நடந்த சோதனை என்பது இன்று 7 வது நாளாகவும் தொடர்ந்து சில இடங்களில் நடந்து வருகிறது.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூரில் முதல் நாள் நடந்த சோதனையின்போது திமுகவினர் அட்டூழியம் செய்தனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரி அதிகாரிகளை திமுகவினர் தடுத்து நிறுத்தி பையை திறந்து காட்ட கூறியதோடு, ஐடி கார்டையும் கேட்டு பணிக்கு இடையூறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கார்களை சேதப்படுத்தியதோடு, அதிகாரிகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதேபோல் திமுக கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு சீல் வைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இரவில் திமுகவினர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தாரணி வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. இதற்கிடையே வருமான வரித்துறையினர் அளித்த புகாரில் போலீசார் திமுக மாநகராட்சி கவுன்சிலர்களான 20வது வார்டு லாரன்ஸ், 16வது வார்டு கவுன்சிலர் பூபதி உள்பட 19 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் தான் வருமான வரித்துறை சோதனை எதிரொலியாக கரூரில் மாநகராட்சி கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருமான வரி சோதனையின் காரணமாக கவுன்சிலர்கள் உள்பட யாரும் வர முடியாத நிலையில் இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை கரூர் மாநகராட்சி கூட்டம் நடக்காத நிலையில் இன்று 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பிரச்சனைகள், திட்டங்கள் பற்றி விவாதிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

கரூர் மாநகராட்சி என்பது திமுகவின் வசம் உள்ளது. இந்த மாநகராட்சி மேயராக திமுகவின் கவிதாவும், துணை மேயராக தாரணியம் உள்ளனர். இங்கு மொத்தம் 48 வார்டுகள் உள்ள நிலையில் 42ல் திமுகவினர் தான் கவுன்சிலர்களாக உள்ளனர். இதனால் மாநகராட்சி முழுமையாக திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மாநகராட்சியில் திமுகவை தவிர்த்து அதிமுகவுக்கு 2 கவுன்சிலர்கள், காங்கிரஸ், சிபிஎம் தலா ஒருவர், மற்றவர்கள் 2 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications