தேவை இல்லாமல் போட்டால் நல்லா இருக்காது! கரூர் திமுக நிர்வாகியின் மிரட்டல் -உருட்டல்! பின்னணி என்ன?
கரூர்: கரூரில் சாக்கடை தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டிய அவலம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவரை செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது என மிரட்டல் விடுத்திருக்கிறார் கரூர் திமுக பிரமுகர் மாரப்பன்.
Recommended Video
இதுமட்டும் அல்லாமல் கரூர் மாநகராட்சி 1-வது வார்டில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பொதுமக்களையும் டிவிகாரன் கிட்ட என்ன சொல்றீங்க நீங்க என அதட்டும் தொணியில் கேட்கிறார்.
செய்தியாளரிடம் சண்டியர் தனம் செய்த மாரப்பனை கரூர் மேயர் மற்றும் மற்ற திமுக நிர்வாகிகள் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட கே.ஏ.நகரில் கழிவு நீரை அகற்றாமலேயே அதன் மீது கான்கிரீட் கலவையை கொட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியதாகவும் உரிய நபர்களை அழைத்து அவர் டோஸ் விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நிகழ்விடத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பேட்டி எடுக்கச் சென்ற செய்தியாளர் ஒருவரை, கரூர் திமுக நிர்வாகி மாரப்பன் பகிரங்கமாக மிரட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்லா இருக்காது
''தேவையில்லாம் செய்தி போட்டால் நல்லா இருக்காது, பார்த்துகங்க'' என மிரட்டும் தொணியில் பேசும் மாரப்பன், பேட்டி அளித்த பொதுமக்களிடமும் ''தேவையில்லாதை எதுக்கு பேசுறீங்க'' என ஏசினார். மேலும், தனது செல்போனை எடுத்துப் பார்த்து யாரிடமோ பேசுவது போல் அதை தூக்கி அடிக்கடி காதில் வைப்பதுமாக அலட்டல் செய்திருக்கிறார் மாரப்பன். கடந்த 10 ஆண்டுகாலம் மிக மிக கடுமையான உழைப்பை செலுத்தி திமுக ஆட்சியை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கழிவுநீர் கால்வாய்
ஆனால் மாரப்பன் போன்ற நபர்களால் ஆட்சி மீதான நல்ல பிம்பமே சிதைந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதனிடையே கரூரில் செய்தியாளரிடம் அட்ராசிட்டி செய்த இவரை, சக திமுக நிர்வாகிகளும், கரூர் மேயரும் சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றனர். கழிவுநீர் கால்வாயில் கிடந்த குப்பை உள்ளிட்ட அடசல்களை நீக்கிவிட்டு கான்கிரீட் கலவையை கொட்டியிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.

செந்தில் பாலாஜி
கரூரை பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊர் என்பதால் அவரும் இது குறித்து கவனத்தில் கொண்டு இதற்கு காரணமான நபர்களுக்கு டோஸ் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தலை சும்மா இருந்தாலும் வால் சும்மா இருக்காது என்பதற்கேற்ப எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறு, ஒட்டுமொத்த கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை கட்சித் தலைமை முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications