பெற்றோர்களே உஷார்.. பள்ளிச் சீருடையில் ஒயின் போதையில் மதி மயங்கிய மாணவிகள்! கதிகலங்கிய கரூர்!
கரூர் : கரூரில் அரசு பள்ளி சீருடையில் மது போதையில் பொது இடத்தில் மாணவிகள் தள்ளாடிய நிலையில், மதிய உணவிற்கு என மாணவிகளை அழைத்துச் சென்று வற்புறுத்தி ஒயின் குடிக்க வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த 3 மாணவிகள் கடந்த ஏப்ரல் முதல் நடந்த பொது தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கான சிறப்பு தேர்வு நடைபெற்ற நிலையில், 3 மாணவிகளும் பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வை எழுதி விட்டு வெளியில் வந்துள்ளனர்.

கரூர் மாணவிகள்
அதில் ஒரு மாணவியின் ஆண் நண்பர் மதிய உணவிற்கு என மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒயின் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவற்றை குடித்த மாணவிகளில் ஒருவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட மற்ற 2 மாணவிகள் பசுபதிபாளையம் பகுதியில் பேருந்தில் ஏறி சர்ச் கார்னர் வந்துள்ளனர்.

ஒயின் போதை
அங்கு வாந்தி எடுத்தும், பாதி மயக்க நிலையில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவசர எண்ணான 100 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவிகளை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பெற்றோர்கள் அதிர்ச்சி
மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்ற தீனா என்பது தெரியவந்தது.

அதிரடி கைது
இவர்தான் அந்த மூன்று மாணவிகளையும் மதிய உணவுக்காக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மூன்று மாணவிகளையும் ரெட் ஒயின் குடிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். அதன் பேரில் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் தினேஷ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications