கரூர் கூட்ட நெரிசல்.. தவெகவினர் மீது வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.. பின்னணி
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகராக இருந்து அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள விஜய் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி விஜய் கரூர் வேலுச்சாமி புரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் திடீரென காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக சட்டசபை தேர்தல் நடக்கும்போது நீண்டகாலமாக ஒரு இடத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள், பிற போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி தற்போது தமிழகத்தில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தனது கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்தார். அதில் மணிவண்ணன் உள்பட 18 பேருக்கு புதிய பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவர்கள் அனைவரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மணிவண்ணன் உள்பட 18 பேருக்கும் எதற்காக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்? என்பது உடனடியாக தெரியவில்லை. தற்போது கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கெண்டு வருகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதன்பிறகு தவெக தலைவர் விஜயிடம் 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் பற்றி சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் கரூரில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்!












Click it and Unblock the Notifications