தலித்துகளுக்கு அனுமதி மறுப்பு- விஸ்வரூபம் எடுத்த கரூர் கோவில் நுழைவு விவகாரம்- இரவிலும் போராட்டம்!
கரூர்: கரூர் அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோவிலில் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று இரவும் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் வீரணம்பட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் தரகம்பட்டியை அடுத்து இருப்பது வீரணம்பட்டி. இங்குள்ள காளியம்மன் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் கடந்த 7-ந் தேதி தலித் இளைஞர் ஒருவர் வழிபாடு நடத்தினார். இதற்கு வீரணம்பட்டியை சேர்ந்த ஒரு ஜாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தலித் இளைஞரை கடுமையாகத் தாக்கி கோவிலை விட்டு வெளியேற்றினர். இதனையடுத்து இருதரப்பினரிடையே மோதல் நிகழ்ந்தது.
இரு ஜாதியினரிடையே மோதல் நிகழ்ந்ததால் அரசு அதிகாரிகள் முதலில் கோவிலைப் பூட்டு போட்டி பூட்டினர். இதன்பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பும் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் நேற்று கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ஒரு ஜாதியினர் கோவிலுக்குள் நுழைந்து கரகத்தை கிணற்றில் கரைத்தனர். இதனால் மீண்டும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து கோவிலை இழுத்துப் பூட்டி கோட்டாட்சியர் புஷ்பாதேவி சீல் வைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு ஜாதியினர் கோட்டாட்சியர் புஷ்பாதேவியை 3 மணிநேரம் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து கோட்டாட்சியரை மீட்டு சென்றனர். அப்போது கோட்டாட்சியரின் கார் மோதி சிறுமியின் கால் முறிந்து. இது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது.
வீரணம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று 2-வது நாளாக திருச்சி- பாளையம் பிரதான சாலை, விராலிப் பட்டி பிரிவு ஆகிய 2 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதும் மறியல் போராட்டமும் நடந்தது. இப்பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு காணப்படவில்லை. இதனால் நேற்று இரவும் வீரணம்பட்டி சுற்றுவட்டார மக்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் வீரணம்பட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications